பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30. fo... moቆo . என்று பெயர் வைத்தார். உலோகத்தாலே ஒரு உருண்டை செய்து ,அதன்கீழே நீரை நிரப்பி,சிறகுகள் வைத்துச் செய்து பார்த்தார். ஒட்டோ என்பவர் செய்த முதன்முதல் முயற்சியாகத் தொடங்கப்பட்டது. அவர் இறந்து விடவே, இந்த சவேரி என்பவர் ஒயினைக் குடித்துவிட்டு ப்ளாஸ்கை கை கழுவுவதற்காக வைத்திருந்த தண்ணிரில் எறிந்தபோது அதிலிருந்து வாக்குவம் உண்டாவதைக் கண்டார். தாமஸ் நியூ கோமன் என்பவர் (1808-1?:9) முதன். முதலில் நீராவியைக் கொண்டு முயற்சி செய்து பார்த்தார். அந்த நீராவியின் மூலம் சில இயந்திரங்களே இயக்கச் செய்து, அதைக்கொண்டு மற்ற பம்புகளே இயக்கச் செய்து,நீராவியைக் கொண்டு பிஸ்டன்கள் மேலும் கீழுமாக உதைக்கச் செய்து, அதைக்கொண்டு இயந்திரத்தை இயக்குமாறு செய்து பார்த்தார். இந்த மாதிரி இயந்திரங்கள் நீராவியால் இயக்கப் படுவதால் அதிகச் செலவையும் குறைந்த பலனையும் தருமென்ருலும், அவற்றைக் கொண்டு சுரங்கத்திலிருந்து தண்ணிரை மேலே கொண்டு வரவும் பயன்படுத்தினுர்கள். ஆணுல் வாட் இதைப் பெரிதாக எண்ணவில்லே. இதைப் போன்ற நீராவி இயந்திரங்கள் வெடித்து உயிருக்கு அபாயத்தை விளைவிக்கக் கூடுமென்று நினைத்து, அதை மேலும் விரிவாக்குவதற்கு, இவரோடு ஒரு பங்கு தராராக சில்வர் ஸ்மித் என்பவர் சேர்ந்து வேண்டிய உதவிகளைச் செய்தார். அதோடு அவர் சில திறமைவாய்ந்த நிபுணர் களேயும் கொடுத்து, அதற்கு வேண்டிய சிறு சிறு பாகங்களைச் செய்து தருவதற்கு உதவி செய்ததன் விளைவாக வாட்டுக்கு ஒரு புதிய தெம்பு பிறந்தது. இந்த உதவியில்லாவிட்டால் அப்படியே சோர்ந்து தன் முயற்சியைக் கைவிட்டிருப்பார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவருடைய அத்தை, ஜேம்ஸ்வாட், உன்னைப்போல் ஒரு சோம்பேறியை நான் பார்த்ததே இல்லே. புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டாவது இரு, கடைசியாக, நீ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. படி, அல்லது ஏதாவது வேலை செய். அதோ,