உள்ளம் கவர் கள்வன் தேவியார் இறைவனுடைய வாம் பாகத்திலே ஒன்றுபட்டு உறைகிறவர். அவரைத் தனியே பிரித்து நினைக்க மனம் வரவில்லை. ஆனாலும் அவரைத்தான் முதலில் நினைக்க வேண்டுமென்று தோன்றியது. . மாதிருக்கும் பாதியனாகிய திருக்கோலத்தில் இறைவ னுடைய இடப் பாகம் அம்பிகையின் பாகம்; அந்தப் பகுதி யில் இடது செவியில் தோடு இருக்கிறது. மற்றொரு பகுதியில் குழை இருக்கிறது. "தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்" என்று மாணிக்க வாசகர் அந்தத் தொன்மைக் கோலத்தைப் பாடுகிறார். இறைவி யைத் தனியே நினைக்காமல், இறைவனோடு ஒன்றுபட்டு நினைக்க வேண்டுமென்றால் அர்த்தநாரீசுவரருடைய லாம பாகத்தை நினைக்க வேண்டும். ஞானசம்பந்தர் அப்படித் தான் செய்கிறார். எடுத்தவுடன் தோடுடைய செவியன்' என்று தொடங்குகிறார். தோடுடைய என்றதனால் அம்பிகையை நினைத்ததாகிறது. செவியள் என்று சொல் லாமல் செவியன் என்று சொன்னதனால் அவ்வம்பிகை இறைவனோடு ஒன்றியவள் என்பதைக் கூறியதாகிறது. எனவே அம்பிகையின் பகுதியை நினைப்பதனால் நன்றியறி வும், இறைவனோடு ஒன்றாக வைத்து நினைப்பதனால் உண்மை யுணர்வும் உடையவர் என்பதைச் சம்பந்தப் பெருமான் புலப்படுத்திக் கொண்டார். வாம பாகத்தை நினைப்பவர் தோடுடைய செவியை நினைப்பானேன்? வேறு ஒன்றை நினைக்கலாமே! ஞானசம்பந்தப் பெருமான் இனித் தேவாரப் பதிகங் களால் இறைவனுடைய புகழைப் பாடுவதையே தம்மு
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/16
Appearance