உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் கவர் கள்வன் 19. பாடல்கள். அவற்றைச் சார்த்துவதற்கு, முன்னமே இசையின் சுவைகண்ட இறைவனுடைய தோடுடைய செவியை யல்லாமல் வேறு சிறந்த இடம் ஏது ? ஆத எந்த நூலைத் தொடங்கினாலும் மங்கல மொழியில் தொடங்குவது வழக்கம். இன்ன இன்ன சொற்கள் மங்கலமொழிகள் என்று பிற்காலத்தில் இலக்கணப் புல வர்கள் தொகுத்துக் கூறியிருக்கிறார்கள். ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பனுவலின் தொடக்கம் "தோடுடைய செவியன்" என்று வரும் திருப்பதிகம். இறைவன் திரு வருளால் எழுந்த எல்லாமே மங்கல வாக்குத்தான். லின் ஞானசம்பந்தர் திருவாக்கில் எழுந்தது எதுவானாலும் அது மங்கல மொழியென்றே கொள்ளுவதற்குரியது. ஆயினும் அத்தகைய சமாதானத்திற்கு அவசியம் இல்லா மலே தோடு என்ற சொல் அமைந்திருக்கிறது. ற அதுவே மங்கலச் சொல்தான்.பூ, சீர்,எழுத்து, உலகம் என்று பிற்காலத்தில் தொகுத்துச் சொல்லும் மங்கலச் சொல் வரிசையிலே தோடு என்ற சொல்லைக் காண முடியாது. ஆனாலும் தோடு என்பது மங்கலச் சொல்லே. உமாதேவியின் பாகத்தில் அமைந்தது தோடு என் பதை முன்பே பார்த்தோம். தோடு மங்கலத்தைக் காட்டும் அறிகுறி. மங்கல வாழ்வையுடைய மங்கைமாரின் மங்கல அறிகுறியாக உள்ளவை மங்கல நாண், தோடு, திலகம், மை, மலர் முதலியன. அணிவகைகளில் தோடு திருமங்கலியத்துக்கு ஒப்பாகவே கொள்ளத்தகுவது 'ஞானசம்பந்தன் சொன்ன, பண்ணியல் பாடல்"; "இசையமர். கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை இயல்லல, இசைமல் தமிழ் ஒருபதும் (திருஞானசம்பந்தர் தேவாரம்.)