உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நிலை 33 மிழலை என்ற பெயர் வந்தது. திருமாலுக்குச் சக்கராயுதம் அருளிய தலம் இது. இத்தலத்துக்குத் திருஞான சம்பந்தப் பெருமான் பல பதிகங்கள் பாடியருளி யிருக்கின்றனர். அப் பெருமான் அருளிய தேவாரத்தில் சீகாழிக்கும், திரு வீழிமிழலைக்கும் மிகுதியான பதிகங்கள் இருப்பதை, "காழி பாதி,வீழி பாதி" என்ற பழமொழி புலப்படுத்தும். இந்தப் பாசுரத்தோடு ஒருபுடை ஒப்புமையுடைய பாசுரம் வேறு உண்டு; அது வருமாறு: பற்று மாகி வாலு ளோர்க்குப் பல்கதி சோன்மதிபார் எற்று நீர்தீக் காலும் மேலை விண்இய மானனோடு மற்று மாதோர் பல்று யிராய் மால்அய னும்மறைகள் முற்று மாகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே. இதுவும் திருஞான சம்பந்தர் திருவாக்கே.