உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் நின்றவன் 285 திருக்க இயலாது நம் மனைவியையே நினைக்கிறோம். கண்ணை மூடிக்கொண்டு பாருங்கள்; அவளுடைய உருவம் அப்படியே தெளிவாக நம் அகக் கண்ணில் தோன்றாது. எந்தப் பொருளும் அகக் கண்ணில் தெளிவாகத் தோன்றாது' என்று சொல்லலாம். அது தவறு. கனவில் நாம் காணும் உருவம் தெளிவாகத்தானே தெரிகிறது? அப் போது புறக்கண்ணா திறந்திருக்கிறது? ஆதலின் மனத்துக் குள் இருக்கும் கண்ணால் தெளிவாக ஒரு பொருளைக் காண முடியும். அப்படி யானால் கண்ணை மூடிக் கொண்டால்கன விலே தெரிவதுபோலத் தெளிவாகத் தெரியாமல் இருப்ப தற்கு என்ன காரணம்? நனவிலே நாம் ஒரு பொருளை நினைக்கும்போது மனம் ஒன்றி அதை நினைப்பதில்லை. கண், வாய், மெய், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் திறந் திருக்கின்றன. ஒரு வீட்டுக் கூடத்தில் ஐந்து சன்னல்கள் இருக்கின்றன. அவற்றைத் திறந்துவிட்டுக் கூடத்தின் நடுவிலே ல் ஒரு ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்தால் சுடர் நின்று எரியாது. அது நின்று எரிய வேண்டுமென்றால் சன்னல்களை அடைத்துவிட வேண்டும். ஐம்பொறிகளும் இயங்காமல் அடங்கி நிற்க, மனத்தை ஒருநிலைப் படுத்தித் தியானம் செய்தால் இறைவனுடைய திருவுருவத்தை உள் த்தே கரணலாம். அலையின்றி அமைந்த குளத்திலே கதிரவன் உருவம் தோன்றுகிறது. ஆனால் குளத்தின் நீரில் சிறிது அலை எழுந்தாலும் கதிரவனது உருவமும் உருவமும் அசை வதுபோல இருக்கும்.அலைகளின் அசைவே உருவம் அசைவது போலக் காணச் செய்கிறது. இறைவன் எல்லோருடை எல்லோருடைய உள்ளத்திலும் எழுங் கருளி யிருந்தாலும் அவன் அங்கே நிற்பதாகத் தோன்றும் தில்லை. ஐம்பொறிகளின் வழியே வரும் அவாவினால் மனம்