உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் உள் நின்றவன் 87 புதையல் இருப்பது தெரியாதவனுக்கு அந்தப் புதைய லுள்ள இடம் சொந்தமாக இருந்தாலும், அதன் மேலே எப்போதும் நடந்து கொண்டே இருந்தாலும் அதனால் அவனுக்குப் பயன் ஏதும் இல்லை. மற்றச் செயலை நிறுத்திவிட்டு, அதைத் தோண்டி யெடுத்தால் அவனுக்குப் பயன் உண்டாகும். இறைவனை அன்பர்கள் எண் ஒன்றி நினைக்கிறார்கள். அதனால் அவன் அருளைப் பெறுகிறார்கள். இறைவனும் அவர்கள் உள்ளத்தே தன் முழு நிலையும் அமையும்படி பொருந்தி யிருந்து மகிழ்ச்சி அடைகிறான். பல அன்பர்களுடைய உள்ளத்தே நின்று மகிழும் பெரு மான் பல திருத் தலங்களில் மூர்த்தீகரித்து எழுந்தருளி யிருக்கிறான். அன்பர்கள் உள்ளத்தால் பற்றி ஒன்றிச் சிந்திப்பதற்காகவே அவ்வாறு பல தலங்களில் கோலத்தோடு அவன் திருக்கோயில் கொண்டிருக்கிறான். அத்தகைய தலங்களில் ஒன்று திருப்பனையூர்.அது சோழ நாட்டில் உள்ளது. பனையைத் தல விருட்சமாக உடையதாதலால் பனையூர் என்ற திருப் பெயரைப் பெற்றது. எண் ஒன்றி நினைந்த அன்பர்களிடம் அவர்களுடைய உள்ளத்துக்குள்ளே நின்று மகிழ்ந்தவன் ஊர் திருப்பனை யூர் என்று சொல்ல வருகிறார் சம்பந்தர். அந்த ஊர் இயற்கை வளம் செறிந்தது. தமிழ் விரகர் இயற்கை யழகை இனிதாகப் பாடுவதில் வல்லவர். இங்கே பனை யூரின் சோலை வளத்தைச் சொல்கிறார். பனையூர் என்ற பெயரைக் கொண்டு அங்கே வெறும் பனை மாத்திரம் இருக்கிறது என்று எண்ணக்கூடாது. பல