50 உள்ளம் கவர் கள்வன் காமம் - ஆசை.ஆசை பற்றிச் செய்யும் செயலைக் காமவினை என்றார். வேகத்தோடு ஒருமைப்பாடின்றிக் கள்ளம் கொண்டு உள்ளம் நிற்கவும், வெய்ய சொல்லோடு தூய்மை நீங்கி நாக்கு இருக்கவும், காம வினையை உடம்பு செய்யவும் இறைவன் நாமத்தை நவிலுதல் நல்லது அல்லாத ஆறு. மனம் வேகம் அடங் கிக் கள்ளம் ஒழிந்து இறைவனையே சிந்திக்கவும், வாக்குத் தண்ணிய தூய சொல்லைச் சொல்லவும்,உடம்பு ஆசையின்றிப் பணி புரியவும் நிற்கும் நிலையே நல்ல ஆறு. . நவிலுதல் - பலகால் சொல்லுதல். ஏத்துதல் - துதித்தல்; புகழ் தல். ஏத்த என்று சொன்னமையால் அவனுடைய பலவகைப் புகழையும் கூறித் துதிக்க என்று சொன்னவாருயிற்று. வல்ல ஆறு-வல்ல முறையை; வல்ல வழியை; ஏகாரம், அசை நீலை.நல்குதல் - அருள் செய்தல். வலிவலம்,திருவாரூருக்கு. அருகில் உள்ளது. மேயவன் - விரும்பி எழுந்தருளி யிருப்பவன்.) . இவ்வாறு ஞானசம்பந்தப் பிள்ளையார் சொன்னது தம்மை நினைந்தன்று. நம் போலியருக்கு, இறைவனை அணுகி இன்னபடி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று தெரியாமையால் நம்முடைய சார்பிலே நின்று, நமக்காகப் பாடிய பாடல் இது என்றே கொள்ள வேண்டும். நல்ல வாறே எம்பெருமானுடைய நாமத்தை நவின்று ஏத்தும் திறம் கைலந்தவர் சம்பந்தர். ஆதலின் அவர் இனிப் புதிய தாக வேண்டுகோள் விடுக்க வேண்டுவதில்லை. ஆயினும் அவன் அருளைப் பெறாது தடுமாறித் தவிக்கும் மற்ற மக்க ளுக்குப் பயன்படும்பொருட்டு இத்தகைய விண்ணப்பங் களைச் சம்பந்தரைப் போன்ற அருட் செல்வர்கள் திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறார்கள்.
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/59
Appearance