உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணர் கோயில் 71 ரைக் கொடியில் செக்கச் செவேலென்று மலர்ந்த மலரைப் பார்த்தால் தீயைப்போலத் தோற்றம் அளிக்கிறது. அதனை அடுத்துக் கரையிலே ஒரு புன்கமரம் நன்றாகப் பூத்துக் குலுங்குகிறது. அப் பூவைப் பார்த்தால் பொரி போல இருக்கும். அந்தப் பூக்கள் தாமரைப் பூவில் உதிர்கின்றன. பொரியைத் தீயில் இடுவது போல இருக்கிறது அக் காட்சி. பொரியைத் தீயிலே இடுவது எப்போது? திரு மணத்தில் பொரியட்டுவார்கள். அது மட்டுமா? சங்குகள் வேறு முழங்குகின்றன. வலம்புரிச் சங்கு முழங்க மணம் புரிவது வழக்கம் அல்லவா? திருமணத்தில் நிகழும் காரியங் களை இங்கே பார்க்கிறோம். பூம்பொய்கையில் உள்ள உயிர்க் கூட்டங்களில் ஆணும் பெண்ணும் மணம் செய்து கொள் கின்றன. அந்த மணத்தில் வலம்புரி முழங்குவது போலச் சங்கின் வர்க்கம் திகழ்கிறது. மணவேள்வித் தீயில் பொரி யிடுவதுபோலத் தாமரை மலரில் புன்கமலர் உதிர்கிறது. என்ன அழகு, என்ன அழகு ! தகவுடைநீர் மணித்தனத்துச் சங்குளவர்க் கம் திகழச் சசைத் தீயுள் மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணம்செய்யும் மிழலை யாமே திருவீழிமிழலையில் இறைவன் திருமணக் காட்சியை அன்பர்களுக்குக் காட்டியருளினான். இன்றும் கருப்பக் கிருகத்தில் மணவாளக் கோலத்தோடு எழுந்தருளியிருக்கும் எழிலைக் காணலாம். இறைவன் மணக்கோலம் கொண்டுள்ள தலமாதலால், பொய்கையிலும் ஒரு மணம் நிகழ்வதாகக் கற்பனை செய்து காட்டுகிறார் தமிழ் விரகர். அகன் அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று ஐம்புலனும் அடக்கி ஞானம்