பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

உள்ளபம் குளிர்ந்தது

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். பலமுறை அந்த நாட்டுக்குப் போயிருக்கிறேன். இந்த முறை வேலணை என்ற இடத்தில் திருமுறை மகாநாடு நடந்தது; அதில் கலந்துகொள்ளப் போயிருந்தேன். பெரிய கூட்டம். வேலணை என்பது இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தில் இருப்பது. யாழ்ப்பாணத்திலும், கீழ்மாகாணமாகிய மட்டக் களப்பிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ் இலக்கியங்களிலும், திருமுறைகளிலும், இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. திருமுறை மகாநாடு நடந்தபோது இலங்கை முழுவதிலுமிருந்து பல அன்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள். மட்டக்களப்பில் உள்ள தமிழர்களும் வந்து விழாவில் நிகழ்ந்த சொற்பொழிவுகளைக் கேட்டு இன்புற்றார்கள்.

இலங்கைக்குச் செல்கிறவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்திவிட்டு இலங்கையின் தலைநகராகிய கொழும்புக்குச் சென்று வந்து விடுவது வழக்கம். கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக் களப்புக்குப் போய் அங்குள்ள தமிழர்களைக் கண்டு சொற்பொழிவு ஆற்றி வருவது அரிது. ஆகையால் அங்குள்ள தமிழர்களுக்குக் கொஞ்சம் ஏக்கம் இருக்கும். மட்டக்களப்பாகிய கிழக்கு மாகாணத்தில்தான் திருக்கோணமலை என்ற பாடல் பெற்ற சிவத்தலம் இருக்கிறது.

திருமுறைவிழா நடந்து கொண்டிருந்தபோது மட்டக் களப்பிலிருந்து வந்த தமிழர்கள் என்னை அணுகி, "விழா முடிந்தவுடன் நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும்; வந்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும். அங்கே பாடும் மீன்கள் உள்ள வாவி இருக்கிறது" என்றார்கள். நான்