பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 iv

கிறது", " இந்த உவமை அற்புதமாக இருக்கிறது', "இந்த நுட்பத்தை மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் " என்று பாராட்டிப் பேசுவார்கள் எழுதுவார்கள் ! அருளநுபவத்தில் கனிந்த அவர்கள் அருள்மயமாக விளங்கினார்கள். சோதியை உள்ளே வைத்து வழிபட்ட அவர்கள், ! ஓங்காரத்து உள்ஒளிக் குள்ளே முருகன் உருவங் கண்டு தூங்கார் ‘என்பதைக் கேட்டால் போதும் தம்மை மறந்து அமர்ந்து விடுவார்கள். சிலசமயம் அலங்காரப் பாடல்களைக் கேட்டு ஆனந்தக் கண்ணிர் சொரி வார்கள். திடீரென்று எதையோ கண்டவர்கள் போல வாய்விட்டு ஹஹ்ஹஹ்ஹா என்று சிரிப்பார்கள். அந்த மாதிரிச் சிரிப்பை எங்கும் கேட்க முடியாது. அவர்கள் உள்ளத்தில் படர்ந்த ஒளி அவர்களுடைய கண் வழியே சுடர்விடும். அந்தக் கண்களைக் கண்டு அடிமையானவர் பலர். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை யவர்கள் அவர்களுடைய குழந்தைத் தன்மையைக் கண்டு சில கீர்த்தனங்களைப் பாடித் தந்திருக்கிறார். கவியுள்ளம் அறிந்து இன் புறும் ஆற்றல் அவர்களிடம் பொருந்தியிருந்தது. வண்டின் ரீங்காரம், குயிலின் இன்னிசை, பறவைகளின் ஒலி இவற்றைக் கூர்ந்து கவனித்து இன்புறுவார்கள். அழகிய மலரும் அழகிய வானமும் அவர்களுடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். அவற்றிலே இறையொளியைக் கண்டு கூத்தாடுவார்கள்.

   அவர்கள் திவ்யப் பிரபந்தப் பாடல்களை இசையுடன் சொல்லிக் கேட்டவர்களும், அபிராமி அந்தாதியை உரத்த குரலோடு உலகன்னையிடம் முறையிடுவதைப் போலவே எண்ணிப் பாடு

வதைக் கேட்டவர்களும் அந்தக் குரலில் இழைந்த உணர்ச்சியை உணர்ந்து தாமும் அந்த உணர்ச்சியிலே கரைவார்கள். அந்த உணர்ச்சியை ரசிகருடைய உணர்ச்சியென்று சொல்வதா? அழ. குணர்ச்சி என்பதா ? அருளுணர்ச்சி என்பதா?

ஒன்றை நல்லதென்று எண்ணினால் அதை வாயாரப் பாராட்டும் வள்ளலாக அவர்கள் விளங்கினர்கள். நல்லதை நல்லதென்று. சொல்லத் தியங்கும் லோபத் தன்மை அவர்களிடம் அணுவளவும் இல்லை. நல்ல பாட்டைக் கண்டால் அதைச் சுவைத்துச் சுவைத்துத் தாம் சுவைத்த முறையைச் சொல்வார்கள்; கடிதத்தில் எழுதுவார்கள்.