பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருதலைக் கொள்ளி எறும்பு

79

போகிற வேலை முன்னாலே வந்து நிற்கிறது. 'இன்று இரவு அவசியம் நாம் தனித்திருந்து தியானம் பண்ண வேண்டும்' என்று கினைக்கிறோம். அந்த இரவு நமக்கு வேண்டிய நண்பர் ஒருவர் வந்துவிடுகிறார். 'அவர் தினந்தோறுமா வருகிறார்? இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வருகிறவரோடு பேசாமல் என்ன செய்வது? தியானம் எங்கே போகிறது? நாளைக்குப் பண்ணிக் கொள்ளலாம்' என்று மறுநாளைக்கு ஒத்திப் போடுகிறோம். அடுத்த நாள் நமக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது; சிறிது ஜுரம் வருகிறது. அன்றைக்கும் தியானம் செய்ய முடிவதில்லை. இப்படியாக ஒவ்வொரு நாளும் நாம் அமைத்துக் கொண்ட பற்றுகள் காரணமாகச் சிறிது நேரம் ஓய்வாகவும், அமைதியாகவும் இருக்க வழி பிறப்பது இல்லை. மற்றவற்றைத் தள்ளிப் போடுவதில்லை; இதை மாத்திரம் எளிதிலே தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறோம்.

இப்படியின்றி எந்தக் காரியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவனைத் தியானம் பண்ணுவது அவசியம் என்ற உணர்ச்சி இருந்தால் எப்படியாவது அந்த நேரத்தில் தனிமையை நாடுவோம். வீட்டிலே தக்க இடத்தில் அமர்ந்து சுவையான உணவை உண்ணும் ஒருவன் கடுமையான வேலையில் ஈடுபட்டு வீட்டுக்குப் போக முடிவதில்லையானால், தான் பணிபுரியும் அந்த இடத்திற்குச் சோற்றை வருவித்து உண்ணுகிறான். வண்டியில் பயணம் செய்கிறவன் வண்டி ஓடும்போதே ஏதாவது வாங்கி உண்ணுகிறான். ஓட்டத்தில் இருக்கிறவன் ஓடும்போதே எதையாவது கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புகிறான். மற்றக் காரியங்களில் ஈடுபடுகிறபோது உண்ண வேண்டிய அவசியம் இல்லையென்று அதை ஒதுக்க முடியாது. அது இல்லாவிட்டால் காரியம் செய்யவே முடியாது. எப்படியாவது உண்ணுவதற்கும், உறங்குவதற்கும் நேரத்தைக்