பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

பணம் தருவதாகப் புக்கர் வாக்களித்தல் போதும் என்பதாகவுங் கூறினார். புக்கரின் வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை. சிறிது பொருள் புக்கருக்குக் கிடைத்தவுடனே அவ்வெள்ளையர் மரங்களைக்கொண்டு வந்து சேர்ப்பதற்குப் புக்கர் இணங்கினார்.

ஒலிவியா அம்மையார் டஸ்கிகீயிலும் அதைச் சுற்றிலுமாகப் போய்ச் சிறிது சிறிதாகக் கட்டடத்திற்குப் பொருள் தேடுவாராயினர். பிறகு, வடக்கே சென்று ஆங்கு உள்ள மக்களுக்கு இப்பள்ளிக் கூடத்தை விளம்பரப்படுத்தி வந்தார். பல மாதா கோவில்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தம் கலாசாலை யைப்பற்றிப் பேசினர். வடக்கேயிருந்து பலர் உதவி செய்ய முற்பட்டார்கள். முதன்முதலாக ஒரு பெண் மணி ஐம்பது டாலருக்கு உண்டியல் கொடுத்தார். இன்னுஞ்சிலரும் இயன்றதை உதவினார்கள்.

முதற்கட்டடமாகப் போர்ட்டர் மண்டபம் (Porter Hall) என்பது தொடங்கப்பட்டது. அக் கட்டடத்திற்கு வேண்டிய பணத்திற் பெரும் பகுதி போர்ட்டர் என்பவரால் அளிக்கப்பட்டது. அதனைக் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் பணமுடை பெரியதாயிற்று. அந்நாளில் நானூறு டாலர்கடனைத் திருப்பிக்கொடுப்பதாக முன்னரே ஒருவருக்கு