பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறுபதிப்பின் முன்னுரை


பயனுள்ள பல பழந்தமிழ் நூல்கள் இப்போது

விற்பனைக்குக் கிடைப்பது அரிதாக உள்ளது.

முக்கிய நூல்களின் மூலப்புத்தகங்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் இருப்பதை அறிந்து அரசின் ஆணைக்கினங்க ஆவணக்காப்பக ஆணையர் அவர்கள் பதிப்பிக்க அனுமதித்ததால் இப்புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிட்டியது.

பல அருமையான கருத்துச் செறிவுள்ள அறிவுரைகள் சிறப்பு பழமொழிகளின் மூலம் அழகாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழகத்தில் நன்கு வரவேற்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இப்புத்தகத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டோம்.

இப்புத்தக வெளியீட்டைத் தமிழக வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கிப்படிப்பார்கள் என்று நம்புகின்றோம். நம்பிக்கை வீண் போகவில்லை என்று அறிந்த பின்னர் மேலும் வரிசையாக பல நல்ல நூல்களை வெளியீட்டுத் தமிழ் இலக்கிய சேவையில் பங்கு கொள்வோம்.

இப்படிக்கு

ஜி.எம். ஸ்வாமி

பதிப்பாசிரியர்.