பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சிக் கூத்தாடி நடந்தாலும், குதிரையாகுமா கழுதை? கொடிக்குக் கொம்மட்டிக்காய், கனத்திருக்குமா? கொசு சுத்திப்பிறந்தபிள்ளை. குலத்துக்காகாதாம். கொடுக்கமாட்டாதவன், கூத்தைப்பழத்தான், டெமாட்டாதவன். எச்சிவென்று சொன்னான். கொடுக்கிறதையுங் கொடுத்து. குஷ்டரோகக்காலில் விழுவானேன். கொடுக்கிறவன். குடுமியைப்பிடித்துக் கன்னத்திலடித்துக் கொடுப்பான். கொடுங்கோலரசு, நெடுங்காலம் நில்லாது. கொடுத்தகடன் கேட்டால், குமரகண்டவலிப்பு வலிக்கிறதாம். கொடுத்தது கேட்டால், அடுத்திடும் பகை. கொடுத்ததைக் கொடுத்தும். குட்டிச்சாத்தன். கொடுத்தபணஞ் செல்லாவிட்டால், கூத்தரிசிக்காரி என்ன செய்வாள். கொடுத்தாலொன்று, கொடாவிட்டாலொன்று. கொடுத்துக் கொடுத்துக்கையும், கூழையாய்ப் போய்ச்சுது. கொடுத்து பொல்லாப்பாகிறதைவிட, கொடாமலிருப்பது நலம். கொடுத்தும் கொல்ல வழியாய்ப் போகிறது. கொடுப்பாரைத் தடுக்காதே. கொடுப்பார் பிச்சையைக், கெடுப்பார் கெடுக்கிறது. கொடுமைகடப்பட்ட செல்வம், பசுங்கலத்திற் பால் கவிழ்ந்தது. கொடுமையான அரசன் கீழிருப்பதைப் பார்க்கிலும், கடுமையான புலியின் கீழிருப்பது நன்று. கொடும்பாவியானாலும், கொண்டமாமியார் வேண்டும். கொடையிலுமொருத்தன். படையிலுமொருத்தன். கொட்டிக்கிழங்கு பறிக்கப்போனால், கோபித்துக் கொள்வார் பண்டாரம், அவித்தரித்து முன்னே வைத்தால் அமுது கொள்வார் பண்டாரம். கொட்டிக்கிழங்கும் ஒரு. முட்டுக்குதவும். கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்கு, கோயிலில் வந்து ஆடத் தெரியுமா? கொட்டிக்கொட்டி அளந்தாலும், குறுணி குறுணிதான். கொட்டினாற் தேன், கொட்டாவிட்டாற் பிள்ளைப்பூச்சி, கொட்டை நூற்கிற அம்மையாருக்குப் பட்டணம் விசாரிப்பேன். கொண்டகடையிலேயா. விற்கிறது. 91