பக்கம்:ஊசிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீட்ட முயல்கிறாள்
திலகவதியாள்......

வெம்பிப் போனவாழ்வை
விட்டெறியாமல் இன்னும்
தம்பிக்காகத்தானாம்-அத்
தமக்கை வைத்துள்ளாளாம்

இன்று

அவள் கண்களிலே
ஆனந்தக்கண்ணிர்.
தந்தை படத்தையும்
தாததாபடததையும
வந்தனை செய்கிறாள்.....
தம்பியை வளர்த்து
ஆளாக்கிவிட்டதாய்
அகம்குளிர்கின்றாள்......

இதோ அவள்தம்பியின்
ஏற்றம் பேச
வரிசையாய்ச்சிலர்
வருகிறார்......
தம்பிக்கு இனிமேல்
சுக்கிர திசையாம்
வங்கிகள் அனைத்தும்
வாரித்தருமாம்
அரசர்கள் கொட்டம்
அடங்கி விட்டதாம்
இனி அவன் எங்கும்
அட்சய் பாத்திரம்
ஏந்தும் அவசியம்
நிச்சயம் இல்லையாம்...
நிசமாய்

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/86&oldid=1013620" இலிருந்து மீள்விக்கப்பட்டது