பக்கம்:ஊசிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



போகட்டும்
இன்றவன் பிறந்த நாளாம்;

இருபத்தைந்தாம் வயதை எட்டிப்
பிடித்து விட்ட
சிறந்த நாளாம்!
வானை நோக்கி
வாழ்த்து மழைகள்......

நான் அவன்
பாதாதி கேசம் பார்க்கிறேன்......
பளிச்சென்று கண்ணில்
படுகிறதோர்நரை!
"இது என்ன இந்த வயதில்
இளம் வயதில்?" என்கிறேன்.
பக்கத்தில் நிற்கும் பாகவதரோ
    “தம்பிதங்கக் கம்பி-அவன்
    தலையில் வெள்ளிக் கம்பி”

என்று
பல்லவி இசைத்துப்
பாடத் தொடங்கினார்......

நான்......
நான் அவன் நண்பன்;
நல்ல நண்பன்!

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/88&oldid=1352411" இலிருந்து மீள்விக்கப்பட்டது