பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றுகோல் -- தங்குதடை யின்றியவர் பேசுங் காட்சி தமிழ்பயிலும் அந்நாளிற் கண்ட துண்டு பொங்குநரை முதுமையொடு பெற்ற பின்பும் புதுமையுடன் பசுமையுடன் எமது ளத்தில் தங்கிஎமை மகிழ்வுறுத்தும் வழியுங் காட்டும். தணியாத தமிழ்க்காதல் ஊட்டிநிற்கும்: சங்கத்துப் பாடலுக்கு நயங்கள் சொல்வார் அடடாஅச் சான்றோர்போல் யாரு ரைப்பார்? எப்பொருளும் எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கார் எனினுமவர் சங்கத்துப் பாடல் என்றால் ஒப்பெதுவும் இலைஎன்ன உவகை கொள்வார்: உள்ளூறி வருமொழியாற் பொழிந்து நிற்பார்: எப்பொருளும் கல்லாரும் விளங்கிக் கொள்ள எளிதிலதை விளக்குவதை வியவார் யாரே? அப்பெருநூ லவற்றிடையே அகப்பொருட்பா அரங்கமர்ந்து கொடுப்பதிலே அவரே ஒப்பார். கேட்டாரை வயப்படுத்தி மகிழ வைத்துக் கேளாரும் விழைந்துவர மொழியுஞ் சொல்லர்: பாட்டாரும் நாநலத்தால் வகைப்படுத்துப் பயன்விளைய முறைப்படுத்து விளக்குஞ் சொல்லர்: ஏட்டாலும் பேச்சாலும் மறுத்து ரைக்க இயலாத படியுரைக்கும் வெல்லுஞ் சொல்லர்: நாட்டாரை விரைந்து தொழில் கேட்கச் செய்யும் நகரத்தார் குலத்துதித்த இனிய சொல்லர். நாவசையும் மணியொலியைக் கேளா ஊர்கள் நமதுதமிழ் நாட்டிலிலை கரையை நோக்கித் தாவலைகள் படர்ந்துவருங் கடல்கடந்தும் தமிழ்மணியின் ஒசையது கேட்ட துண்டு: பாவமுது படைக்குமிசை செவிமடுத்தார் பாராட்டிப் பாராட்டி அழைப்ப துண்டு: கோவலர் வாய்க் குழல்போலக் கேட்டார் நெஞ்சைக் குளிர்விக்கும் இயல்பிற்றே சொல்லின் வன்மை, 10 11