பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றுகோஸ் பாட்டுக்கு நயமுரைக்குந் திறமே யன்றிப் பழையபரிமேலழகன் உரைக்குங் கூடக் கேட்டுவக்க நயமுரைக்குந் திறமை கொண்டார்: கிளர்ச்சிதரும் இவர்பேச்சைச் சுவைத்து ணர்ந்து கூட்டெழுந்த வேட்கையினால் அரங்கந் தோறும் கொலுவிருந்து தலைமையுரை நல்கும் வண்ணம் நாட்டவர்தாம் நிரல்படவே வேண்டி நிற்பர்: நாளெல்லாம் புகழ்பரப்பும் தலைமைப் பேச்சு. கதிரேசர் தலைவரெனுஞ் சொல்லைக் கேட்டால் கற்றவரும் பேசுதற்குத் தயங்கி நிற்பர் மதிவாணர் பேசுங்கால் தவறு காணின் மறுப்புரைக்கக் கண்ணோட்டஞ் சிறிதுங் காட்டார்: அதனாலே எழுவாரை மட்டந் தட்டல் அவர்கொள்கை எனக்கருதல் வேண்டா. பேச்சில் எதுவேனுங் குறைநேரின் தமிழுக் கன்றோ இழிவுவரும் எனுங்கருத்தால் மறுப்பு ரைப்பார். புலவர்தமை இகழ்ந்துரைப்பார் எவரே யாகப் பொறுமைகொளார் மறுத்திடுவார் அச்சங் கொள்ளார்: பொலிவுதரும் பதவியினால் ஒர மைச்சர் புலவர்தமை இகழ்வுரையால் எள்ளல் செய்தார்: "இலகுதமிழ் ஆசிரியர், க.கா. என்ற இரண்டுக்கும் மேலொன்றும் அறியார்’ என்றார்: பலருமவண் கைதட்டி ஆர்ப்பரித்தார்: --- பண்டிதமா மணியுமதைப் பார்த்திருந்தார். ‘அமைச்சர்தரும் மதிப்புரைகள் உண்மை. ஆனால் அதற்குமேல் இவர்தெரிந்த பொருள்தான் என்ன? நமக்குலகில் கடவுளொடு காதல் என்ற நற்பொருளை விஞ்சுகிற பொருள்தான் உண்டா? தமிழ்ப்புலவர், அரசியலில் ஆங்கி லத்தில் தனிப்புலவர், இவ்வகையில் யாரும் ஒன்றே அமைப்பிதன்மேல் அறியாதார் கூட்டத்துள்ளே அமைச்சருந்தாம் ஒருவரெனத் துணிந்து ரைத்தார் 'க_கடவுள், கா. காதல். 9 | 16 17 18 19