பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

[xii]

கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8


வெண்டலை நாகனார் திகழ்கிறார். வஞ்சிநாட்டரசன் மலைக்கோன், கடாரத்தரசன் பெருந்திறற்சீயன் இருவரும் எதிரிகளாக நிற்கின்றனர். உடனிருந்தே சூழ்ச்சிவலை விரிக்கிறான் கணியன்நம்பி. வழியமைப்பது போல குழியமைக்க முயல்கிறான் படைத்தலைவன் வெல்போர்க் கடம்பன்.

இத்துணைத் தூண்களையும் இழுத்து நிறுத்திக்கட்டிய மாளிகைக்குள் நம்மை நடமாட வைக்கிறது 'இளம்பெருவழுதி' நாடகக் காப்பியம்!

இலக்கிய நுட்பம், காப்பிய உத்தி முதலிய ஓவியத் துரிகைகளை ஏந்தியிருந்தாலும் - தமிழ் மேம்பாட்டுக் கருத்துணர்ச்சி|சுவர் எழுப்புவதில் தான் முடியரசனார் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

சமகாலச் சூழலைத் தொட்டுக் காட்டும் அவர், ஈழ உரிமைப் போர் நெருப்பும் நம் நெஞ்சில் கனலற வைத்து விடுகிறார். கருத்துச் சோலைகளைக் காட்டியபடியே கதைப்பாதை நீள்கிறது.

சிலையாக நிற்கிறான் இளம்பெருவழுதி! அவன் வாழ்வைக் கதையாக விவரிக்கிறார் முதியவர் ஒருவர். காதால் இளைஞன் ஒருவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். நாமும் கண்ணால் கேட்டபடிக் கதையோடு நகருமாறு காப்பியம் அமைக்கப்பட்டிருக்கிறது.

நகர முடியாதபடி, ஆங்காங்கே கருத்துச் சோலைகள் குறுக்கிட்டு நம் மனத்தை மணத்தால் நிரப்புகின்றன.

வீரம், கல்வி இரண்டில் எது சிறந்தது? வழுதி கேட்கும் வினாவிற்கு விளக்கம் தருகிறார் அமைச்சர் நாகனார்.

“ஆண்மை பெண்மை ஆயிரு தன்மையுள்
மேன்மையென் றொன்றை விளம்பல் தகுமோ?
செறிதரும் அறிவு செங்கள வலிமை
விரிநீர் வைப்பிற்கு இரண்டும் வேண்டும்.
மறுவறு கல்வி மனநலம் காக்கும்
நிறைவுறு மறமோ நீனிலம் காக்கும்.”