பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 “பண்ணமைத்த தேவாரப் பாடல் கேட்டால் பரமனுக்கும் நெஞ்சுருகும் செவிமடுத்தோர் எண்ணத்தை நெக்குருக்கும்; இராம லிங்கர் இயற்றியநல் லருட்பாடல் தேனும் கைக்கும் வண்ணத்தை உருவாக்கும்; அயன்ம தத்தில் வருவேத நாயகனார் வழங்கும் பாடல் கண்ணொத்த சமரசத்தைப் படைத்துக் காட்டும்: கனியிருக்கக் காய்க்வர்தல் மடமை யன்றோ?” 12 “தாண்டவனார்' பதமிருக்கப் பிறபாட்டுக்குத் தாளங்கள் இடல்முறையா? கையில் பையில் வேண்டுபொருள் நிறைந்திருக்கக் கடனுக் காக வேற்றவர்பின் தொழுதுசெலல் சரியா? பத்தி வேண்டுமெனில் விளங்குமொழிப் பாடல் வேண்டும்: விளங்காத மொழிகேட்டால் உணர்வா தோன்றும்? நீண்டபுகழ் பாரதிகள் குஞ்சரங்கள் நிலைதமிழில் வீணுக்கா பாடிச் சென்றார்?” 13 இசைசுவைத்து மகிழ்வதற்கு மொழிவேண் டாவென் றியம்புகின்றீர்; அறிவுடைய வாதம் அன்று: வசைமிகுந்த பிடிவாதம் நீவிர் பாடும் வடமொழியும் தெலுங்கிசையும் மொழிகள் என்ற இசைவுமக்கு வரவிலையோ? ஏனோ இந்த இழிசெயலை மேற்கொண்டீர்? தமிழில் மட்டும் நசைவிடுத்த காரணமென்? உங்கள் வாழ்வின் நலிவுக்குத் தமிழ்செய்த தீமை என்ன? 14 “மொழிவேண்டா என்றுரைத்தீர் வாதத் துக்கு மொழிந்ததைநான் ஏற்கின்றேன். இசைஎழுப்பக் குழலிருக்க யாழிருக்க அவைவிடுத்துக் குரலெழுப்பிப் பாடுவதேன்? பாடி வாழுந் தொழிலுடைய பாகவதர் கூட்டந் தான்ஏன்? தொண்டைகிழித் தலறுவதேன்? அலறும் ஒசை மொழியன்றோ? இசைக்கருவி யிருக்கும் போது மொழிஎதற்கோ? அதுமட்டும் வேண்டும் போலும்” 15 'முத்துத்தாண்டவர். பாரதிகள் குஞ்சரங்கள் - சிகப்பிரமணிய பாரதியார். கவிகுஞ்சர பாரதியார் போன்றோர் H w