பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏக்கம் தீர்க்க எழுந்த நூல்!

xvii

 மற்றவர் அழிவில் பெற்றஇக் கொற்றமும் வெற்றியும் புகழும் வேண்டுந கொல்லோ?

இழப்பின் துயரம், மன்னனைப் போரில்லா உலகமைக்கும் உறுதி பூணச் செய்கிறது.

'இனத்தின் ஒற்றுமை மனத்தில் கொள்க!
முனைப்பினை விடுக! முரணுதல் தவிர்க!
அழிவுகள் தொலைக! அமைதி நிலவுக!
பழிசெயும் போர்இனிப் பரவா தொழிக!

அழிவை அழிக்கத் தீர்மானிக்கும் பாண்டியன் மனம், அமைதி உலகம் அமைய வழி கூறுகிறது.

"ஒருவருக் கொருவர் உதவுதல் அன்றித்
திறையெனக் கோடல் தீர்தல் வேண்டும்
உடன்பிறப்பு உணர்ச்சி ஒவ்வோர் உளத்தும்
இடம்பெறின் அழிபோர் எழுதல் உண்டோ?
மக்கள் பற்றும் மக்கள் பண்பும்
மிக்க மனத்தில் மேவும்நல் அமைதி.
அழிவெலாம் தொலைக அமைதி நிலவுக!
ஒழிக. போரே! ஒழிக போரே!”

இந்த நாடகக் காப்பியம் உணர்த்தும் செய்தியாய், போர் இல்லா உலகத்தை முடியரசனார் முன்நிறுத்துகிறார்.

அவரின் இலக்கிய நெஞ்சம் இளம்பெருவழுதிக்கு எழுப்பிய இந்த வரலாற்று மாளிகை, இன எழுச்சிக் கருத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகக் காப்பியம் வழங்கும் கருத்து வெளிச்சம், பாதையையும் கால்களையும் மறந்து விடாமல் தமிழினம் தன்னையுணர்ந்து பயணம் செய்ய வழிகாட்டுகிறது.பயணம் செய்தால் பயன் அடையலாம்.

-ந.கவுதமன்.

'தாயகம்’ எசு.வி.எல்.நகர் சூலூர், கோவை 641 402 23.10.2008