பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கதிர் "தமிழண்ணல்" டாக்டர் இராம. பெரியகருப்பன், தமிழியல் துறைத் தலைவர்.மதுரை காமராசர் பல்கலைக் கழகம். தமிழ் மொழியை ஐயந்திரிபறக் கற்று. நல்லாசிரியராய் விளங்கி, செழுந்தமிழின் சுவைதேரும் பாவலராய்ச் சான்றோராய் விளங்கி வருபவர் கவியரசு முடியரசா பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட எண்ணும் இம் முடியரசர் நமக்குத் தொழில் கவிதை, நற்றமிழ்க்கு ஆக்கம் தேடுதல்' என வாழ்ந்து வருபவர். தமிழ்நலம் கருதித் தன்னலம் விடுத்தவர். சிந்துபாடும் சிற்றாறு போலும் செந்தமிழ் நடை வல்லவர். தமிழ்த்தாய்க்கு வாய்த்த மறந்தும் புறந்தொழாத ஆழ்வார்; பாமலர்கள் கொண்டு நாளும் அவளை அருச்சிக்கும் நாயன்மார்; தமிழ்ப்பிழை செய்வாரை மனமுருக வைத்துத் தினமவரைத்திருத்தும் மணிவாசகர் கண்ணொளி மங்கினும் தமிழ் நலத்தைக் கூர்ந்து கண்டு, காட்டத் தளராதவர். தலைமுடி நரைப்பினும், தமிழைப் பாடும்போது இளமை பெற்று மீசையை முறுக்கும் தமிழ் மறவர்.தமிழாசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். ஆயினும் தமிழ்த்தாயைப் பாடும் பணியில் ஒய்வு காணாதவர். பண்டிதமணி மகாமகோபாத்தியாய மு. கதிரேசனாரின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் புனைய, இவரினும் பொருத்தமானவர் வேறு எவருமிலர். மதுரை காமராசர் பல்கலைக் கழத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ.சுப மாணிக்கம் அவர்கள். பண்டிதமணி நூற்றாண்டு விழா நினைவாகப் பண்டித மணியைப் பற்றிப் பல் படைப்பு இலக்கியங்களையும் திறனாய்வு களையும் தக்கார் பலரைக் கொண்டு எழுத வைத்தனர். அம் முயற்சியுள் முடியரசனார்க்குக் காப்பியப் பணியை ஒப்படைத்த தொன்றே இவர் தம் ஒப்பரும் திறமைக்குச் சான்றாகும் எனலாம்.