பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 () கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 பண்டிதமணியவர்களே கூறியாங்கு பழம்பெருநூல்களை யெல்லாம் பயில்கின்றபொழுது, அவற்றை முன்கூட்டியறிந்திருந்தது போன்ற நினைவும் தெளிவும் அவருக்கு ஏற்பட்டனவாம். 'படித்தனன் எங்கோ முன்னர்ப் படித்தது போன்றுணர்ந்தான்’ (2.22) 'கற்பிக்கும் ஆசான் இன்றித் தனிமையில் அனைத்தும் கற்றுத் தக்கதோர் புலமை பெற்றான்' (2:25) 'சொல்லிய ஆசான் பாடஞ் சொல்லுமுன் உணர்ந்து கொண்ட நல்லியற் புலமை கண்டு நயந்தவர் வியந்து நின்றார்’ o (2:29] இவ்வாறு மணியார்க்குக் கல்வி கைவரப் பெற்றதன் காரணத் தைக் காப்பியப் புலவர் நடுநிலையோடு நவில்கின்றார். 'ஒருமையில் கற்ற கல்வி உதவிடும் எழுமை என்ற மறைமொழி புகன்ற வாய்மை மறைமொழி யாகா தன்றோ? தெரிதரும் முன்னை நூல்கள் தெளிவுறக் கற்கும் போது பரிவுடன் பழைய பாடம் படிப்பபோல் இருந்த தென்றார்’ (2.9) இங்ங்னம் நிகழ்ந்தமை புனைந்து கூறப்பட்டதன்று,காப்பிய நாயகரே வெளிப்படுத்திய உண்மையாகும். தமிழன்னையே தலைமகற்குற்ற குறைகண்டு மனம் நொந்து இக் கொடையினை நல்கினாள் என்னும்போதுதான், புலவர் காப்பியப் புலவராகின்றார். "தலைமகன் இவனுக் குற்ற தாழ்வினைக் கண்டு நொந்தாள் இலைநிகர் இவனுக் கென்ன இவனைநான் உயர்வு செய்வேன் கலைமலி புலமை ஈவேன் கதிரொளி பரவ என்று