பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 22 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 தலினால் அக்கவலையைத் தவிர்க்க உதவினாராம். இத்தகைய சுவையான இலக்கிய நயந்தோற்றும் பகுதிகள் இதிற்பலவுள. இலக்கிய நயம் பாராட்டுதலில் ஈடும் எடுப்புமற்றவரென மதிக்கப் பெற்ற ஒருவரது வரலாற்றுக் காப்பியமும் இத்தகைய நயங்களால் பொதுளப் பெற்றிருத்த்ல் சாலச்சிறப்பேயன்றோ? காப்பிய நாயகர் பண்பு நலன்கள் காப்பிய நாயகராம் கதிரேசரின் குணநலன்களும் இயல்புகளும் ஆற்றலும் அறிவும் இந் நூலுள் நடப்பியலாக நன்கு எடுத்தோதப் பட்டுள்ளன. இவ் வகையில் மிகைப் புனைவைத் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது. எப்பொழுதும் எதிலும் திருத்தமும் செம்மையுமே மணியாரின் குறிக்கோள்கள். உணவும் சுவையாக நன்றாக அமைய வேண்டுமென அவர் விரும்புவர். ‘பாச்சுவையில் குறைகாணின் எடுத்துச்சொல்லிப் பாங்குபெற வழியுரைக்கும் ஆற்றல்போல நாச்சுவையிற் குறையிருப்பின் சுட்டிக்காட்டி நன்கடிசில் அமைவதற்குப் பக்குவத்தை ஆச்சியிடம் எடுத்துரைக்கும் அழகுகாணிள் அடடாஒ எனநமக்கு வியப்புத் தோன்றும்.' (4:19) பண்டிதமணியின் உலகியலறிவும் நிகரற்றது. நூலறிவுடைய பலர் உலகியலில் யாதுமறியா இயல்பினராய் இருப்பர். கதிரார் அதற்கு மாறாக இருதுருவங்களும் இணையுமாறு வாழ்ந்தவர். அறிவிலும் பதவியிலும் உயர உயரச் செல்வத்திலும் உயர்ந்து விளங்கினார் அவர் வீடு கட்டுவது முதல், வரவுசெலவுக்கணக்குப் பார்ப்பது வரை நன்கறிந்த பல்கலைச் செல்வராக அவர் வாழ்ந்த மையைப் பாவியம் விரித்துக் கூறத் தவறவில்லை. இருவேறு உலகத்தியற்கை என்றநூற்கணக்கை மாற்றிவைத்தது இவர்திறம் (4:25). தலைவரை நூன்முழுதும் பாராட்டும் இந்நூல் அவருக்கேற்ற வாழ்க்கைத் துணை, எங்ங்னம் அவர் உயர்வுக்கெல்லாம் உதவிய அரிய துணையாக அமைந்தது என்பதையும் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றது. 'கண்ணகியைக் கண்ணெதிரே கண்டதில்லை கதிர் மணியார் வீட்டிற் கண்டோம் என்று மதிக்கப்படும் மீனாட்சி அன்னை, கண்ணிறைந்த கணவனெனக் கதிராரின் மதிவிளைத்த மெய்பார்த்து