பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 24 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 என அவ்வூரைச் சிறப்பிக்கின்றார் ஆசிரியர். ஆனால் அவ்வூர் பண்டித மணியார் பொதுப்பணியிலிடுபட்டு நன்மை சில செயு முன்னர் எவ்வாறு இருந்ததென எடுத்துரைக்குமிடத்து, அதன் மழைக்காலச் சேற்றுநிலை படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அவ்வூருக்குப் போகும் வழிதான் பெரிதும் இடர்ப்பாடானது. திருமணம் முடித்தவர் பெண்ணழைத்துப் போகுமுன் மழைவந்து, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால் மூன்று நாளானாலும் காத்திருந்து தான், வெள்ளம் வடிந்து பின் தம்மூர் போக வேண்டுமாம். இதனால் அவ்வூரில் சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பெரிதும் தயங்குவராம். இந் நிலைமையை நீக்க அரும்பாடுபட்டுப் பண்டிதமணியார் முயன்றார். பாலம் கட்டுவித்துப் பாதையைச் செப்பனிட்டார்; ஊருக்குள் அஞ்சலகம், பள்ளிக்கூடம் வரச்செய்தார். இவற்றைப் பாட்டில் வடிக்குமழகு படித்தின்புறத்தக்கது. H ஒருநாள் மகிபாலன் பட்டிக்குள் உற்றார் + மறுநாளும் வந்துசெல மற்றும் மனம்விழையார் கற்றாழை கள்ளி கருநாகம் புக்குவரும் புற்றாலே எங்கும் பொலிந்திருக்கும்; வான்முகில்தான் சற்றே பொழியின் சகதி நிறைந்திருக்கும் பற்றாக் குறைக்கங்குப் பள்ளம் படுகுழிகள் ஆற்றில் புனலும் அடித்துத் திரண்டுவரும் சேற்று நிலமாய்அச் சிற்றுர் விளங்கும், பகடு தனைப்பூட்டிப் பண்டியில் ஊர்வோர் சகடு தனையிழுக்கத் தாங்குதித்து நிற்பார்: சுடுகாடும் அங்கேசுடர்விட்டுக் கண்ணிற் படுமாறு தோன்றிப் படர்வாரை அச்சுறுத்தும், கள்வர் சிலரும் கரந்து திரிந்திடுவர்: பேருந்து செல்லாப் பெருமை உடையதோர் ஊரந்த ஊரேதான்; யாரங்குச் செல்வார்கள்? இத்தகைய ஊரினைச் சீர்திருத்திய மணியாரின் முயற்சி, பொதுப்பணிபுரி காதையில் எடுத்துரைக்கப்படுகிறது. இத்தகைய பின்புலமான செட்டிநாட்டில் அன்று பலவூர்கள் இவ்வாறே இருந்தன. வெளிநாடு செல்வதே குறிக்கோளாகக் கொண்டவரா தலின் தத்தம் ஊர் நலனை அவர்கள் கருதிலர். எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்; அப் பையனை வெளிநாட்டிற்கனுப்பிவிடுவர்.