பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்றுகோல் | 27 ‘குலம்பார்ப்பர். குவிசெல்வ வளம்பார்ப்பர். குடிபார்ப்பர். சீரும் பார்ப்பர், நலம்பார்ப்பர். கலன்பார்ப்பர் நடந்துவரும் நடைபார்ப்பர். உடையும் பார்ப்பர், நிலம்பார்ப்பர், நாகரிக மனைபார்ப்பர். நிகழ்மணத்தில் அறிவு. பண்பு' நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர் நதரத்தார் நிலைதான் என்னே’ (4:3) இங்ங்னம் இந்நூலுட் காணும் நகரத்தார் நிறைகுறைகள் பற்றிய பல கருத்துகள் தொகுத்துக் காணுதற்குரியனவாம். இது நகரத்தார் ஊடே இருந்து பார்த்த பிறரொருவர் பார்வையாக இருப்பதனால் கூர்மையாகவும் சீர்மையாகவும் பதியத்தக்கதாக படைப்பாளி இடம்பெறும் பாங்கு சிலப்பதிகாரத்தில் இளங்கோ தாமே ஒரு பாத்திரமாக இடம்பெற்றுத் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்வதுடன், பத்தினித் தெய்வத்தின்பால் தமக்குரிய பத்திமையையும் வெளிப்படுத்திக் கொள்கிறார். கவிஞர் முடியரசன் பண்டிதமணியின்து.ாண்டுதலால் மேலைச்சிவபுரி வ. பழ. சா. பழநியப்பர் உருவாக்கி, அவர் தம்பி அண்ணாமலையாரால் புறந்தரப்பட்டு. இன்று வரை அவர்களின் மக்கள் சாமிநாதர், சிதம்பரனார் மற்றும் பெயரர் சீனி என்ற பழநியப்பர் போல அனைவராலும் காக்கப்பட்டுவரும் சன்மார்க்க சபையில் தொடக்கக்கல்வி முதல் புலமைப்பட்டம் வரை பயின்றவர். மேலைச் சிவபுரிக்கு வந்த தமிழ்ச்சான்றோர்களின் உரை நலன் களைக் கேட்டுணர்ந்தவர். பண்டிதமணியின் சொற்பொழிவுகளைக் கேட்டும், சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா அவர்களுடன் பண்டிதமணி நோயுற்ற போது சென்று கண்டும் இத்தகைய நிகழ்ச்சிகளால் இவ்வரலாற்றிலும் சிறிது இடம்பெற்றவர். எனவே அவர் தம் உள்ளத் துணர்வுகளை வடிக்கும்போது தம்மை மறந்து பாடுகிறார். சன்மார்க்கசபைத்தாயை நினைந்து போற்றுகிறார். வ. பழ. சா. குடும்பத்தாரை வாயார, மனதாரப் புகழ்கின்றார். "செழுநிதியை வகுத்தளிக்க வல்லார் தம்முள் வாழ்த்தெடுத்துப் பாடுதற்குத் தகுதியுளார் வ. பழ. சா. பழநியப்பர் ஒருவராவர்” (3.8)