பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன்றுகோல் நிழல்களே சாயும் அன்றி நிலையினிற் சாயா நெஞ்சர் கழனியில் வரம்பு செய்வர் கற்பதில் வரம்பு செய்யார் உழவினிற் களைகள் தோன்றும் உறவினிற் களைகள் காணார் அழல்களே சுடுவதன்றி அவர்மொழி சுடுவதில்லை உழுகலங் குழிகள் செய்யும்: ஒருவர்மற் றொருவர்க் காகக் குழியகழ் வினைகள் செய்யார் கூடியே வாழ்ந்து நிற்பர். புழுங்குதல் அரிசிக் கன்றிப் புந்தியில் அதனைக் கொள்ளார் பழகுதற் கினியர் அந்தப் பகுதியில் வாழும் மாந்தர் குலவுவார் நடந்து செல்லக் குறுவழி கொண்ட தேனும் உலகுளார் நடந்து செல்ல உயர்வழி பலவுஞ் சொல்லி அலகிலாப் பெருமை பூண்ட அரும்பெரும் பாடல் தந்து நிலமெலாம் புகழ்விரித்து நிலவுவ தவ்வூர் ஆகும் சிலவிதை தூவி விட்டுச் செந்நெலாற்களஞ்சியத்தைக் குலவுற நிறைத்துக் காட்டுங் குடியினர் வாழுஞ் சிற்றுார் உலகினர் வியக்கும் பாடல் ஒன்றினைக் கொடுத்து விட்டுப் பலபல பாடல் கொண்டு பல்கிடுஞ் சிறப்பிற் றாகும் பாதும் ஊரே 12 13 |M 15