பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள் 8 | கணக்கிட்டுச் செட்டோடு வாழுமவர் கல்விக்குக் கணக்கின்றி வழங்கி வந்தார்; பணக்கட்டுப் பாடின்றி வழங்கியதால் பாரிலுளார் வள்ளலென அவரைச் சொன்னார்: மணக்கட்டும் அறிவுமணம் மலரட்டும் கலைமலர்கள் எனவிழைந்து செல்வ நீரை அணைக்கட்டுப் போடாமல் திறந்துவிடும் அழகுளத்தைப் பெருமனத்தை வியவார் யாரே? நல்லறத்தை விலைகொடுத்து வாங்குவது நாகரிகச் செயலன்று. நாளும் ஓங்கும் பல்வளங்கள் பெற்றவர்தாம் ஊருணிபோல் பழமரம்போல் மருந்துமரம் போல நின்று நல்குதலை இயல்பாகக் கொளல்வேண்டும் நல்லவர்கள் ஒப்புரவென் றதைத்தான் சொல்வர்: இல்லறத்தாள் மனமகிழத் தலையளித்தல் இயல்பன்றோ? விலைகொடுத்துப் பெறுவாருண்டோ சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதிலை தூண்டுவதால் ஈகைமனம் பிறப்ப தில்லை. மலைக்காட்டில் திரிமயில்கள் தோகைதனை வற்புறுத்திக் கூறுவதால் விரிப்பதில்லை. மலைக்கோட்டு மாமுகிலும் பிறர் சொல்லை மதித்தெழுந்து மழைநீரைப்பொழிவ தில்லை; தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து தானுவந்து வழங்குவதே ஈகை யாகும் குலவிவருஞ் செல்வத்தைப் பெட்டகத்துட் குவித்தெடுத்துப் பார்ப்பதிலே என்ன கண்டோம்? செலவுசெயத் தன்னலந்தான் வழியென்று தனித்துண்டு வாழ்வதிற்றான் என்னகண்டோம்? பலவிருந்தும் உண்பதுவும் உடுப்பதுவும் ஒரளவே பகுத்துணர்ந்தால் உண்மை தோன்றும்: உலவிவரும் இயல்பினதை ஒடுக்காமல் ஊர்நலத்துக் குதவிவரல் இன்ப மன்றோ? 'உண்பது நாழி உடுப்பன இரண்டே’ (புறம் செல்வத்தை