பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 அன்புவளர் சமயத்தை விழைந்த தன்றி ஆர்ப்பாட்டச் சமயத்தை விரும்ப வில்லை. என்புருக இறைவனடி தொழுத லன்றி ஏமாற்று வேலைக்குக் கொள்ள வில்லை. பொன்பொருள்கள் வருமென்று பற்ற வில்லை பொலிமனத்து தூய்மைக்கே பற்றி நின்றார். புன்மையென வாழ்க்கையினை வெறுக்க வில்லை புணையாக அதைப்பற்றி வாழ்ந்து வந்தார் உள்ளத்தாற் பொய்யாது சிவனை எண்ணும் உயர்சமயம் இவர்கொண்ட சமய மாகும்: கள்ளத்தார் கயமையினார் கரந்து வாழக் கண்டமதம் இவர்கொண்ட மதமே யன்று: வெள்ளைத்துள் பொடிபூசும் மெய்ய ரேனும் வேடத்தைத் திருவுளத்தும் நினைந்தாரல்லர்: எள்ளித்தான் சமயத்தை நகைக்கும் பாங்கில் எச்செயலும் என்றுமவர் கொண்ட தில்லை புறப்பொருளாச் சமயத்தைக் கொண்டா ரல்லர் புந்திமகிழ் அகப்பொருளென் றெண்ணி வாழ்ந்தார் மறச்செயலுக் குற்றதென நினைந்தாரல்லர் மனத்துக்கண் அறத்துக்கே துணையாக் கொண்டார் பிறர்க்குரிய சமயத்தைப் பகைத்து வாழும் பேதைமையைக் கனவகத்தும் எண்ண வில்லை மறப்பரிய மனையாள்மாட் டவர வர்க்கு மதிப்பிருக்கும் அன்பிருக்கும் அதனா லென்ன? கொண்டவன்பால், தன்னோடு பிறந்த வன்பால் குலமங்கை செலுத்திவரும் அன்பி னுக்குள் கண்டறியும் இருதன்மை இருத்தல் போலக் கடைப்பிடித்து நடப்பதற்குச் சிறந்த தாக அண்டியதன் சமயத்திற் சிறப்பு நோக்கும் அடுத்தபிற சமயத்திற் பொதுவின் நோக்கும் கொண்டொழுகல் யாவர்க்கும் கடமை என்பார் கூடாராய்ப் பகைமைகொளல் மடமை என்பார்