பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨

ஊன்றுகோல்

ஒருமையிற் கற்ற கல்வி
உதவிடும் எழுமை என்ற
மறைமொழி புகன்ற வாய்மை
மறைமொழி யாகா தன்றோ?
தெரிதரும் முன்னே நூல்கள்
தெளிவுறக் கற்கும் போது
பரிவுடன் பழைய பாடம்
படிப்பபோல் இருந்த தென்றார் 9

திண்ணையில் அமைந்த பள்ளி
திருத்திடும் ஆசாற் சார்ந்தங்
கெண்ணுடன் எழுத்துங் கற்கும்
இளையநற் பருவத் தாரைக்
கண்ணெனும் வணிக நோக்கில்;
கலத்தினிற் செலவி டுத்தல்
பண்ணுயர் செட்டி நாட்டுப்
பழங்குடி வழக்க மாகும் 10

வணிகர்தம் குலத்து வந்த
வழக்கிளுல் இலங்கை யென்னும்
அணிநகர்க் குய்த்து வைத்தார்
அக்கதி ரேசன் தந்தை;
பணியினை ஏற்ற பிள்ளை
பதினேராண் டகவை கொண்டான்;
துணிபகர் கடையில் அந்தத்
துய்யவன் பணிமேற் கொண்டான் 11