பக்கம்:ஊரார்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ð6 நாட்டாமைக்காரர் மெளனமாக ஒரு கடிதத்தை எடுத்துச் சாமியாரிடம் நீட்டினர். சாமியார் "நீயே படி, கேட்கிறேன்' என்ருர். இதற்குள் ஊரே அரச மரத்தடி யில் கூடிவிட்டது. நாட்டாமை படித்தார். 'காளிமாதாகி ஜே! இதல்ை சகல கனதனவான்களுக்கும் தெரிவிப்பது யாதெனில், இப்பவும் கடந்த மாதம் ஏழாம் தேதி இரவு உங்கள் ஊரில் நாங்கள் கொள்ளையடித்து விட்டுத் திரும் புகிற போது எங்களில் ஒருவனை மேத்தா என்பவன் கொலை செய்யப்பட்டிருக்கிருன். அவனைக் கொன்றது நீங்கள்தான். உங்களில் யாரோ ஒருவன்தான் அவனைக் கொன்றிருக்கிறீர்கள். இப்பொழுது மேத்தா எங்களிடம் இல்லை. அவனுக்குப் பதில் உங்கள் ஊரிலிருந்து யாராவது ஒருவனை எங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் பழிக்குப் பழி உயிருக்கு உயிர்! இல்லையேல் உங்கள் ஊரையே தீ வைத்துக் கொளுத்தி வீடுவோம். வெடிகுண்டுகள் வீசி அழித்து விடுவோம். క్షే இம்மாதம் முப்பதாம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்கு அதே வராவதிக்கருகில் எங்கள் லாரி வந்து நிற்கும். நீங்கள் அனுப்பும் ஆள் அந்த லாரியில் வந்து ஏறிக் கொள்ள வேண்டும். போலீசுக்குத் தெரியப்படுத்தி எங்களை மடக்கி விடலாம் என்று மட்டும் எண்ணுதிர்கள். எங்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. வெடிகுண்டுகள் இருக்கின் றன. யாரும் எங்களைப் பிடித்துவிட முடியாது. ஜாக்கிரதை' - - இப்படிக்கு, கொள்ளைக்கூட்டத் தலைவன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/60&oldid=758746" இருந்து மீள்விக்கப்பட்டது