பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 13 "குமார். சொல்றதைக கேளு. ஒரு அடி நகர்ந்த... அப்புறம் ஒரேயடியாய் விழுந்திடுவே... ஒப்பன் பிணமாவுறதுக்கு முன்னால... நீ பினமாயிடுவ..." கூட்டத்தில் ஒரு சிலர் கோபமாக எழுந்தபோது, பழைய காலத்து' பரமசிவம், தன் ஜாதிக்காரர்கள் தங்களுக்காகத்தான் எழுவதாக நினைத்து. சற்று மிரட்டிப் பேசினார். "என்னடா சின்னான், ஒன் மனசில... என்னடா நினைச்சிக் கிட்ட...?" குமார், வருங்கால மாமனாருக்கு வக்காலத்து வாங்கினான்: "கடைசில... ஒன் பறப்புத்திய காட்டிட்ட பாரு..." சின்னான். இப்போது அமைதியாகப் பேசினான். வகுப்புவாதியை பதிலுக்கு வகுப்பு ரீதியில் பேசி, வெற்றியடையச் செய்யக்கூடாது. "நான் பறையன்தான் குமார்... பறப்புத்தியத்தான் காட்டுறேன்... என்னை மாதுரி படிச்ச நீ இப்படிப் பேசையில... நான், அனாதயாப் போன ரெண்டு குடும்பத்துக்காவ என் பறப்புத்திய காட்டுறேன். ஒரு மனுஷன் எவ்வளவுதான் நாகரிகப்பட்டிருந்தாலும், எவ்வளவுதான் மேனா மினுக்கியா இருந்தாலும், அவனுக்கு இயலாமை வரும்போது, அவனோட கச்சாபுத்தி... அதாவது அவனோட நிஜமான இவன் வந்துடுமுன்னு சைகாலஜி சொல்லுது... அதனால நான் வருத்தப்படல... ஆனால்... ஏய்... பிச்சாண்டி. நயினாரம்மாவயும், மூக்கையா சம்சாரத்தையும் இங்க கூட்டிவா..." இடும்பன்சாமி. நயினாரம்மாவையும், பிச்சாண்டி மூக்கையாவின் மனைவியையும், மாமன் மாமியாரையும் கூட்டி வந்து, சின்னான் முன்னால் நிறுத்தினார்கள். அவர்கள் அழ அழ, சின்னான் கர்ஜித்தான்: "சும்மா மிரட்டி பிரயோஜனமில்ல... இந்த நயினாரம்மா... ஒரு மகள கரையேத்தணும்... மூணு பையங்கள வளர்க்கணும்... இந்த மூக்கையா பெண்டாட்டி நிறைமாத கர்ப்பிணி... இவள்... காலத்துக்கும் கண் கலங்கப்படாது... நயினாரும், மூக்கையாவும், சின்னத்துரை எசமான் வீட்டில், வருஷக் கணக்கில் மாடா உழைச்சவங்க... அந்த பிணத்த வேற வித்துட்டாரு... இவங்களுக்கு வழி பண்ணாம... நீங்க வழி நடக்க முடியாது..." ஜம்புலிங்கம், இடும்பன் சாமியைப் பார்த்ததும் கோபவயப்பட்டுக் கத்தினார்: "ஒரு நயாபைசாக்கூட தரமுடியாது. ஆனதப் பாருங்க, பிணத்துக்கு ரேட்டு பேசுற காலம் வந்துட்டு... என்ன..." இதற்குள், நயினாரம்மா "சின்னான்... நான் என் புருஷனை விக்க வரல... வில பேச வரல... நீ கூப்பிட்டியேன்னு வந்தேன்... என் மவராசனே போயிட்டாரு. இனும பணமா பெரிசு..." என்றாள். மூக்கை யாவின் மனைவி "மச்சான். நீ ரூபா வாங்கிக் கொடுக்காண்டாம். அது என் கால் தூசிக்குச் சமம். ஒன்னால... போன புருஷன கொண்டு வர aa, 8.