பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 44 ஊருக்குள் ஒரு புரட்சி தவித்துக் கொண்டிருந்தபோது "நான் வரலாமா" என்று ஒரு குரல் ஒலித்தது. தங்கம்மா... சாப்பாட்டுத் தட்டுடனும், ஒரு ஈயப்பானையுடனும் வந்த தங்கம்மா. அவன் முன்னால் வந்து அமர்ந்தாள். சாதத்தைப் பிசைந்து, அவன் வாயில் ஊட்டினாள். பிறகு "அம்மாதான் சாப்பாட்ட கொண்டு போகச் சொன்னாள்" என்று சொல்ல வேண்டியதை நான்கு வார்த்தைகளில் சொன்னாள். "தங்கம்மா... என்னை கைவிட மாட்டியே..." தங்கம்மா, அவன் கைகளை அழுந்தப் பிடித்தாள். ஒருவர் கையை ஒருவர் பிடிக்க, முகம் தெரியாத அந்த இருட்டில் இருவரும், எதுவும் பேசாமல், ஒருவர் உள்ளத்தில் இன்னொருவர் வியாபிக்க, ஒருவர் மேனியில் இன்னொருவர் உயிராக, உள்ளங்கள் தழுவி ஒன்றுபட்டதைக் காட்டும் வகையில் கையோடு கை கலக்க, தோளோடு தோள் உரச, பிறகு ஒருவர் தோளில் ஒருவர் தலையும், ஒருவர் தலையில் இன்னொருவர் தோளுமாக லேசாகக் கண்ணயர்ந்த போது - சேரியில் மேளச் சத்தம் கேட்டது. ஆண்டியப்பனும், தங்கம்மாவும் சிலிர்த்து எழுந்தார்கள். 20 ஊர்ச் செருப்புக்காக ஒதுக்கப்பட்ட இடம்போல் தோன்றிய சேரிப் பகுதியில், பெரும்பாலான குடிசைகளுக்கு, நடைவாசல், புறவாசல் கிடக்கட்டும், முறையான வாசலே கிடையாது. ஒலைத்தட்டிகள்தான் வாசல் கதவுகள். உடைந்து கிடந்த மணற் கட்டைகள்தான் லோபா லெட்டுக்கள். சமையலறைதான் சயன அறை. குடிசைகளின் குடுமி போலிருந்த ஒலைகள் செல்லரித்து, அதன் இத்துக்கள் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, சேரியின் வடக்குப் பகுதியில் இருந்த முனரீஸ்வரன் கோவிலுக்கு அர்ச்சிக்கப்பட்டவை போல் விழுந்து கொண்டிருந்தன. மனிதர்கள் குனிந்துகொண்டே நிற்கவேண்டிய குடிசைகள், தொட்டால் விழக்கூடிய மண்சுவர்கள். தொடாமலே விழும், சிலந்தி வலைகள், முனிஸ்வரன் கோவில் முகப்பில், ஜாதி-ஹரிஜனங்களை வரவேற்பது போல் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மூல விக்ரகத்திற்கு முன்னால், சர்வ ஜாதி செத்து. சமதர்ம ஜாதி பிறந்தது. என்று எழுத்துக்களால் கோலம் போடப்பட்டிருந்தது. கோவிலுக்கு முன்னால் உள்ள ஆலமரத் துணைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் சின்னானும், இன்னும் ஒருசில ஹரிஜன வாலிபர்களும் நின்று கொண்டு. ஊர் முனையை நோக்கிக் கொண்டிருந்தார்கள். காத்தாயியும், இன்னும் சில பெண்களும், இடுப்பில் குழந்தைகளை வைத்திருந்தாலும் శ్రి#65Y6J இல்லாதவைபோல், இயங்கிக் கொண்டிருந்தார்கள். காத்தாயியின் கணவன் முத்துக்கருப்பன், ஒரு