பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஊருக்குள் ஒரு புரட்சி திருவி விடுவாங்களோன்னு, திருதிருவென்று விழித்த கர்ணத்திற்கு ஒன்று புரிந்துவிட்டது. இனிமேல் இந்தப் பயல்களை, யாரும் எதுவும் செய்ய முடியாது... நமக்கேன் பொல்லாப்பு... மடமடவென்று ஒப்புவித்தார். "பேச்சிமுத்து குளத்துல... பரமசிவம் நிலம் இருபது ஏக்கர்ல பதினைஞ்சி. தலைக்கு மூணாய், அடைக்கலசாமி, ஆண்டியப்பன், மயானபுத்திரன். பிள்ளையார். பெருமாள் பேருக்கு இருக்கு... கிட்டப்பா நிலத்துல குளத்தடி பாசனம் பிச்சாண்டி பேர்ல..." "சர்வே நம்பரோட சொல்லும்வே!" கர்னம் சர்வே நம்பருடன் சொல்லச் சொல்ல, சின்னான் குறித்துச் கொண்டான். கடைசியாய் ஒரு கேள்வியைக் கேட்டான். "ஒம்ம நிலம் யார் பேர்ல இருக்கு?" "எனக்காவது விலக்குக் கிடையாதா?" "ஒமக்கு விலக்கு கூடாது. விலங்குதான் போடணும். சரி சொல்லும்." "என்னோட நிலத்துல பிள்ளையார் கோவில பக்கத்துல இருக்கிற நிலம், இந்த கிருஷ்ணன் பேர்ல இருக்கு." "பிள்ளையார் கோவில் நிலம், கோவில் சொத்தாச்சே?" "இல்ல. அத பட்டாப் போட்டு. அப்புறம் இவன் பேருக்கு மாத்துனேன்." "நல்லது... காத்தாயி இவருக்கு காபி கொடுத்துட்டு. ஒன் வீட்லயே இவர... கொஞ்ச நேரத்துக்குக் காவலுல வை." கர்ணத்தை இரண்டு பேர் தள்ளிக் கொண்டு காத்தாயியின் வீட்டுக்குப் போனபோது, இன்னும் சஸ்பெண்டிலேயே கிடக்கும் இடும்பன் சாமியும், இன்னொருவரும் மீசைக்காரனைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அவன் தலையில், இரண்டு எண்ணெய் டின்கள் இருந்தன. மீசையை, சின்னானின் முன்னால் நிறுத்திவிட்டு. "உள்ளதைச் சொல்லு. இல்லன்னா... முதுகுல டின்னு கட்டுவோம்" என்றார் இடும்பன்சாமி. மீசைக்காரன், அந்த மீசை படும்படி தரையில் விழுந்து. கூட்டத்தை வணங்கிவிட்டுப் புலம்பினான்: "சாமி சத்தியமாய் சொல்லுதேன். இந்த எண்ணெய் டின்ன... பள்ளிக்கூடத்து மானேஜர் ஜம்புலிங்கம்தான் தென்காசில ரகசியமா விக்கச் சொன்னாரு... கேர்ல. இருந்து. பிள்ளியளுக்கு கோதுமையை தாளிச்சு ரவையா கிண்டிக் கொடுக்கதுக்காக பள்ளிக்கூடத்துக்கு வந்த எண்ணெய் டின்னுன்னு சத்தியமாய எனக்குத் தெரியாது... நெல்லு வண்டில... அந்தத் தேவடியா மவன்தான் கொண்டுவந்து போட்டான். இதுதான் நிஜம்..." ஆண்டியப்பன், பெருந்தன்மையாகப் பேசினான்: "பரவாயில்ல் அண்ணாச்சி. நீ எனக்கு சின்ன வயசில... நொங்கு வெட்டிக் கொடுத்ததை மறக்கல. சரி. நீயும் எங்க ஜாதில சேரு.