பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1.59 கூட்டம், புறப்பட்டது. வழிநெடுகிலும் பண்ணையார்கள் எடுத்துவைத்த விவசாயக் கருவிகளையும், மாடுகளையும், கூட்டுறவுத் தலைவர் உதவியோடு. சம்பந்தப்பட்டவர்கள் வாங்கிக் கொண்டார்கள். மானேஜர் ஜம்புலிங்கம் வீட்டிற்கருகே வந்தபோது, இடும்பன்சாமி "வாங்க உள்ள போகலாம்" என்று குரல் கொடுத்துவிட்டு, 'ஆம் ஆம் என்ற கோரஸை எதிர்பார்த்த போது, சின்னான், "வேண்டாம்... அதுக்கு வேற வழியிருக்கு" என்று சொல்லித் தடுத்தான். மூதேவி என்று தட்டாசாரி கொடுத்த பட்டத்தைச் சுமந்த ஆசாரிப் பையன் "எங்க மூதேவி வீட்ட சோதனை போட்டால் நிறையத் தங்கம் கிடைக்கும். அது இருக்கிற இடமும் எனக்குத் தெரியும்... என்ன சொல்றிய" என்றபோது, சின்ன்ான், அவனையும் தடுத்துவிட்டு, கம்பீரமாகப் பேசினான்: "இனிமேல்தான் நமக்கு சோதனையே இருக்கு... இப்போ பயப்பட்டு ஒதுங்கி நிற்கிற பரமசிவம், குமார் வகையறாக்கள் ஊருக்கு போலீஸ் கொண்டு வரலாம்... பரவாயில்ல... பயப்படவும் வேண்டாம். நாமே... ஒரு பள்ளிக்கூடம் கட்டுவோம்... நம்ம பிள்ளிங்கள அதுல சேர்ப்போம்... இடும்பன்சாமியும், சஸ்பெண்டான மீதி இரண்டுபேரும் பள்ளிக்கூடத்தை கவனிப்பாங்க." கண்ணாடி ஆசிரியை, கண்களால் கெஞ்சிக் கொண்டு பேசினார்: "சின்னான்... நான் ஒனக்கு ஒரு காலத்துல பாடம் சொன்ன ஆசிரியை என்கிறத மறந்துடாத சின்னான்... என்னையும் சேர்த்துக்க சின்னான்... சம்பளங்கூட வேண்டாம் சின்னான். கடைசிக் காலத்துலயாவது. மரியாதையாய் வேலை பார்க்கதுக்கு ஒரு ஆசை... அதை நிராசையாக்கிடாதடா... கண்ணு..." சின்னான் நெகிழ்ந்து பேசினான்: "என்னம்மா நீங்க... டேய் மடையா... நான்தாண்டா பள்ளிக் கூடமுன்னு கேட்காம இப்படி கெஞ்சுறிங்களே... ஆண்டி... நம்ம டிச்சர்... நம்மள அப்போ அடிச்சது மாதுரி அடிச்சிக் கேளாம பேசுறதப்பாரு..." ஆண்டியப்பன், ஆசிரியையின் கைகளை எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டான். - கண்ணாடி ஆசிரியை, சிலுவைக்குறியை எடுத்து அங்குமிங்கும் ஆட்டிக் கொண்டார். இந்த மக்குப்பயல் ஜம்புலிங்கம், என்ன கேள்வி கேட்டான். இந்த மாதுரி ஒரு இது இருபது வருஷத்துக்கு முன்னால வந்திருந்தால்... நாயி கிட்டயும் பேயி கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியது இருந்திருக்காதே...' சின்னான், கூட்டத்தைப் பார்த்து, பலத்த குரலில் பேசினான்: "ஒரு கூட்டுறவுச் சங்கத்தையும் அமைப்போம். நாம் அமைக்கிற இந்தச் சங்கத்துக்கும், பள்ளிக்கூடத்திற்கும், அரசாங்கத்திடம் அங்கீகாரம் கேட்போம். தந்தால் தரட்டும். தராவிட்டால் போகட்டும். இனிமேல் நாம் ஒன்றாய் வாழ்வோம். இல்லன்னா ஒன்றாய் சாவோம்... நாம்