பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 ஊருக்குள் ஒரு புரட்சி "நீ சொல்றதுக்கு முன்னே... தீர்மானம் ஆன விவகாரம். ஏழைகள் பேர்ல மாட்டை வாங்கிட்டு, எடுத்துக்கது என்ன நியாயம். உன்னை... விட்டாலும் விடுவனே தவிர... மாட்ட விடமாட்டேன்...!" "பேச்ச பாரு..." "அட... சும்மா... விளையாட்டுக்குச் சொன்னா... இப்படியா? சரி... வேகமா நட... இந்த மாட்டக் கட்டிட்டு. இந்த குமார் பயல... ஒரு பிடி பிடிக்கணும். எத்துவாளிப் பய..." ஆண்டியப்பன், மாட்டைப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடந்தபோது, தங்கம்மா, மாட்டை அவன் விடவில்லையானால் ஏற்படப் போகும் விளைவுகளை நினைத்து ஒரளவு கலங்கியபடி நடந்தாள். 2 கிட்டத்தட்ட அந்த ஒலை வீட்டின் உயரத்திற்கு, காண்டா மிருகத்தின் கம்பீரத்தோடு, காட்டு யானையின் வாளிப்போடு, பச்சை வண்ண மேனியில் பால்வண்ணப் புள்ளிகள், அங்குமிங்குமாக அள்ளித்தெளித்த கோலப் புள்ளிகள் போல் காட்சியளிக்கத் தோன்றிய அந்த ஜெர்ஸி கலப்பினப் பசுவையும், சற்றுத் தொலைவில் ராட்சதக் கருவண்டுபோல் காட்சியளிக்கும் அந்தக் கன்றையும், ஆண்டியப்பன் கண் கொட்டாது பார்த்தான். கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், வெட்னரி டாக்டரின் ஆமோதிப்பில், பெங்களுரில் இருந்து வாங்கி வரப்பட்ட அந்த மாடு, தொலைவில் கட்டப்பட்டிருக்கும் தன் கன்றை நக்குவதற்குத் திமிறி. அது முடியாமல் போகவே கட்டிக் கொண்ட கயிற்றை, நாக்கால் தடவியது. பின்பு வாய் வலித்ததாலோ, என்னவோ தான் பிணைக்கப்பட்டிருக்கும் வாதமடக்கி மரத்தை முட்டியது. ஆண்டியப்பனுக்கு, மனம் கேட்கவில்லை. கை கால்களை உதறிக்கொண்டே எழுந்து கன்றை அவிழ்த்து, மாட்டின் நாக்குப்படும் இடத்தில கட்டிவிட்டு, மாட்டை ஒரு கையாலும் கன்றை ஒரு கையாலும் தடவிக் கொடுத்தான். அந்தச் சமயத்தில் இளமையிலேயே, பதவிஆசை' பிடித்து சிவலோகம் போய்ச் சேர்ந்த தன் அன்னையையும் வீட்டுக்குள் கைக்குழந்தையுடன் மார்பில் ஏற்பட்ட கட்டிகளால் அழாமல் அழுது கொண்டிருக்கும் தங்கை மீனாட்சியையும் அவனால் நினைக்காமல் ഭൂുlഖിജ്ഞ. ஒரு தடவை தங்கையைப் பார்த்து, அவளுள் அம்மாவையும் பாாக்க வேண்டும் என்று நினைத்தவனாய் வீட்டுக்குள் போனான். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒலைப் பெட்டியில் இருந்த புண்ணாக்கை எடுத்துக்கொண்டு வந்து, விளிம்பு உடைந்த மண்பானை