பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 ஊருக்குள் ஒரு புரட்சி "பொறு தங்கம்மா... இந்த மாட்ட கட்டியாச்சு: ஒன்னைக் கட்டுறதுதானா பெரிசு? ஒம்மாவ பாலால குளிப்பாட்டி, ஒய்யாவ நெய்யால குளிப்பாட்டி, நீ என்னைக் குளிப்பாட்டும்படியான காலம் வரப்போவுது..." "மாட்ட... பரமசிவம் கேட்கலியா...?" "ரெண்டு தடவ ஆள் வந்தது. தர முடியாதுன்னு சொல்லிட்டேன்... அந்த மீசக்காரன் மாட்ட அவுக்கப் போனான். நான் அருவாள எடுத்தேன். திரும்பிப் பாராம போயிட்டான். வேலக்காரனுக்கு... வேலைக்காரனே எதிரியா மாறுறான் பாரு. சர்க்காருல ஏழ எளியவங்களுக்காவ... கொடுக்கிற கறவ மாட்டயும், உழவு மாட்டயும், மற்ற பொருளயும்... பண்ணையாருங்க அமுக்கப்பாக்கதுல என்ன நியாயம்...? உதாரணமா... இந்த மாடு மூவாயிரம் ரூவா... இதுல சர்க்கார் மட்டும் ஆயிரம் ரூவா இனாமா கொடுக்குது. இதுக்காவ... நம்ம பேர்ல வாங்கச் சொல்லி, அவங்க அனுபவிக்கனுமுன்னா என்ன நியாயம்...? அதுலயும் அவங்க விட்டுவச்சதத்தான் நாம எடுக்கோம். கர்ணம், பொண்டாட்டி பேருக்கு ஒரு மாடு வாங்கியிருக்காரு... அந்த அம்மா சிறு விவசாயியாம். மிராசுதார் குமாரசாமி... காலேஜ்ல படிக்கற பேரன் பேருல உழவு மாடு வாங்கியிருக்காரு... அவன் மிகச் சிறு விவசாயியாம். இப்டி... எல்லா பணக்காரனும்... பொண்டாட்டி... பிள்ளியளகூட பிச்சக்காரங்களா ஜோடிச்சதுல... இப்போ கிராமத்துல எவன் பிச்சக்காரன், எவன் பிரபுன்னே சர்க்காருக்குத் தெரியல..." "அநியாயமா இருக்கே..." "நம்ம ஆளுங்களச் சொல்லு. முனுசாமி. தான் வாங்கின வண்டிய... குமாரசாமிகிட்ட கொடுத்துட்டான். ராமசாமி, நெற்குதிர வாங்கி, சரோஜாகிட்ட ஒப்படைச்சுட்டான். இன்னைக்கி... பரமசிவம் வீட்ல பண்ணைக்காரங்க மேடையில வாங்குனத எல்லாம். அவரு வீட்ல போட்டுட்டு வாராங்க... ஊரு எப்டி உருப்படும்...? வீட்டு முன்னாலயே... முளையுறவங்கள வச்சி... என்ன பண்ண..?" "எங்கய்யா கூட உழவு மாட்ட... பரமசிவம் வீட்ல கட்டிட்டு வந்துட்டார். போதாக் குறைக்கி நான்... மல்லிகா கிட்ட தெரியாம திட்டிட்டேன்னு' மன்னிப்புக் கேக்கணுமுன்னு ஒத்தக் காலுல நிக்காரு... நான் ரெண்டு காலுல இங்க வந்துட்டேன்..." "ஒய்யாவ மாதிரி ஆளுவளாலதான் ஊரே குட்டிச்சுவராப் போச்சு... பரமசிவத்துக்கு. செருப்புத் தைக்கதுக்காவவே உடம்புல தோல வச்சிருக்க மனுஷன். ஆனால் நான் அப்படி இல்ல... ஆனானப்பட்ட ல்ைலிகாவயே... அடிக்காத குறையா பேசுன தங்கம்மாவோட... அத்த ப.கன்..."