பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ஊருக்குள் ஒரு புரட்சி எனக்கு எழுபதாயிரம் ரூபா கிடைச்சது மாதிரி. அப்புறம், மாட்ட... ஏண்டா பரமசிவம் வீட்ல கட்டல?" "எந்த மாட்ட மாமா...?" "என்னடா... தெரியாதது மாதிரி கேக்குற... நீ ஒப்படைச்சிடு வேன்னு... நம்பிக்கையா... ஒன்ன... வாங்கச் சொன்ன மாட்ட... நீ வச்சிக்கிட்டு இருக்கது நம்பிக்கத் துரோகண்டா..." "நான் செய்தது நம்பிக்கத் துரோகமில்ல மாமா... சர்க்கார்ல... ஏழைங்களுக்காவ கொடுக்கிற மாடுங்கள... ஏமாத்தி வாங்குற பரமசிவந்தான் நம்பிக்கைத் துரோகி..." "இப்போ... நீ மாட்ட விடப்போறியா இல்லியாடா..." "என் மாட்ட நான் எதுக்காவ விடணும்...?" "நான் சொல்லியும் விடமாட்டியா...?" "நீரு ஒம்ம வீட்டுக்குக் கேட்டிருந்தா... நானே கொண்டு வந்து கட்டிருப்பேன். இப்போ நீரு தாய் மாமனா வரல. பரமசிவத்தோட வேலக்காரனா வந்திருக்கியரு..." "நான் சொல்றதக் கேளு. அவ்வளவு பெரிய சபையில... மந்திரி கையால மாடு கொடுத்து கவுரவம் பண்ணுனவருக்கு துரோகம் பண்ணப்படாது..." "அது கவுரவம் இல்ல மாமா... கோவிலுல வெட்டப்போற கிடாவுக்கு கொம்புல பூ சுத்துனது மாதுரி..." "ஒனக்கு எவன் கொம்பு சீவியிருக்கான்னு எனக்குத் தெரியும். ஒப்பன் புத்திதான ஒனக்கும் இருக்கும். அவன். கள்ளத் தேங்காய் பறிச்சவன்தான்..." "மாமா... எங்கய்யாவ பேசுனா... எனக்குக் கெட்ட கோபம் வரும்... அதுவும் பரமசிவம் வேலைக்காரனா வந்துக்கிட்டு..." "ஒன்கிட்ட என்ன பேச்சி. நான் பரமசிவத்தோட உப்ப்த் தின்னவன். அவரு சொன்னது மாதுரி... மாட்ட அவுக்கப் போறேன். நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்க... அவுத்துத் தாlயா... நானே அவுத்துக் கிடட்டுமா..." "அவுக்கிற கையி... துண்டா விழும். அது யாரு கையா இருந்தாலுஞ் 5子f." "பாத்துப்புடலாம்..." அடைக்கலசாமி, ஆவேசமாக வெளியே வந்து மாட்டின் கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தார். ஆண்டியப்பனும், முற்றத்தில் கிடந்த ஒரு பாளை அரிவாளை எடுத்துக் கொண்டு. மாமனை நெருங்கினான்.