பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 41 "அவன். எட்டயப்பனா மாறிட்டான் சார் எங்க மன்றத்தில இருந்து... அவன நீக்கிட்டோம் சார்.. நன்றி கெட்ட பய சார்...! எங்கள பயன்படுத்தி... எங்களையே காட்டிக் கொடுத்துட்டான் சார்..." சப்-இன்ஸ்பெக்டர் முகம் இறுகியது. அப்படியானால், இந்தப் பசங்க, மிஸ்டர் குமாரோட எதிரிகளா... தெரியாத்தனமா உட்காரச் சொல்லிட்டேனே! "என்ன விஷயம்... விஷயத்த சட்டுப்புட்டுன்னு சொல்லுங்க... ஒங்களோட குசலம் விசாரிச்சுக்கிட்டு இருக்க எனக்கு நேரமில்ல..." அதிர்ந்துபோன மாணிக்கம், விவகாரத்தை ஆதியோடு அந்தமாகச் சொன்னான். சப்-இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டே பேசினார். "இது. சிவில் சமாச்சாரம், அதோட... மாட்டைப் பிடிச்சது அடைக்கலசாமி. பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்த சம்பந்தப்படுத்துறது அதிகப்பிரசங்கித்தனம். இதுல யாரு ஆண்டியப்பன்" "இவன்தான் சார்...!" "இவன்தானா... யோவ்... எழுந்து நில்லுய்யா... வேட்டிய... கால்வரைக்கும் போடுய்யா... பெரிய துரை மாதுரி மடிச்சிக் கட்டிட்டு நிக்கதை... முன்சீப் ரிப்போர்ட் தந்தாராய்யா...?" ஆண்டியப்பன். அதிர்ந்துபோய் எழுந்தான்... யந்திரம் போல் வேட்டியை கீழே இறக்கினான். "முன்ப்ே..தரமாட்டான் சார்." என்றான். சப்-இன்ஸ்பெக்டர் குதித்தார். "பெரிய மனுஷன. அவன் இவன்னு பேசினால் பல்ல உடச்சிடு வேன். நீங்கல்லாம் படிச்சவங்க... இந்தக் கிறுக்கனை எதுக்காக இன்னும் கிறுக்கனாக்குறீங்க..." ஆண்டியப்பனும், இதர இளைஞர்களும் அதிர்ச்சியுற்று, செய்வதறி யாது திகைத்தபோது, சட்டாம்பட்டி தலையாரி, அங்கே வந்து, இரண்டு கடிதங்களை சப்-இன்ஸ்பெக்டரிடம் நீட்டினார். ஒன்று, முன்சீப். ஆண்டியப்பன் தன்னை கொலை செய்ய வந்ததாகக் கொடுத்த ரிப்போர்ட். இன்னொன்று ஆண்டியப்பனை உள்ளே போட குமார் எழுதியிருந்த ரெகம்மண்டேஷன் லட்டர். சப்-இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார். "நீங்க வரும்போதே நினைத்தேன். ஏய்யா... ஆண்டி... முன்ப்ேப கொல பண்ற அளவுக்கு ஒனக்கு தைரியம் வந்துட்டு இல்ல...! உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்." ஆண்டியப்பன், வைக்கவேண்டிய இடத்தில் வைக்கப்பட்டான். லாக்கப்பிற்கு உள்ளே தள்ளப்பட்ட அவன், இரும்புக்கிராதி கம்பிகளைப் பிடித்துக்கொண்டு செய்வதறியாது திணறினான்.