பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 49 இருக்கது தெரியும். நான், டி.எஸ்.பி. யாய் மாறினால், என்னால பாரபட்சமில்லாம இருக்க முடியாதுன்னு தீர்மானித்து, மனசை கல்லாக்கிக்கிட்டு, வேலையை வேண்டாமுன்னுட்டேன். அந்தச் சமயத்துல தபால் இலாகாவுல கெஜட்டட் வேலை வந்ததும் ஒரு காரணம். ஒண்ணுமட்டும் சொல்றேன் சார்... "ஏழைகளுக்கு நீங்க நியாயமாய் நடந்தால், பணக்காரங்க விரோதத்த சம்பாதிக்கலாம். அநியாயமாய் நடந்தால், பணக்காரங்களின் பணத்த சம்பாதிக்கலாம். ஆனால் ஒண்ணு, பணக்காரங்க விரோதம் அன்றே சாடும் - கொல்லாது. ஆனால் ஏழை தரித்திர நாராயணனகளோட விரோதம் நின்றே சாடாது - கொல்லும், பழமொழியை மாற்றிப்போட்டு, பக்குவமாச் சொல்லிட்டேன். அப்புறம் ஒங்க இஷ்டம். "பார்த்து நடந்துக்குங்க... நான் வாரேன் ஸார். இதுக்கு மேலேயும் நான் பேசினால், உங்க யூனிபாரத்துக்கு மதிப்புக் கொடுக்காதவனாய் ஆயிடுவேன். வரேன் ஸார். தரித்திர நாராயணனுக்கு இன்னொரு பெயர் ஆண்டி... குட்பை..." சின்னான் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ் பெக்டருக்கு, தன் யூனிபாரத்தைக் கழட்டிப் போட்டுவிட்டு. அவன் பின்னாலேயே ஒட வேண்டும் போலிருந்தது. ஏதோ ஒரு எப். ஐ ஆரை படைத்துக் கொண்டிருந்த பிரும்மாவின் ஒரு கூறான ரைட்டரைப் பார்த்து, "பார்த்தியாய்யா... ஒன்னை மாதிரி அவரும் ஒரு ஹரிஜன்தான். எவ்வளவு லட்சிய வெறியோடு இருக்காரு பார்த்தியா? நீயும் இருக்கியே... நீ என்னடான்னா ஹரிஜனங்ககிட்டத்தான் அதிகமாய் வாங்குற" என்று சீறினார். நான் மட்டும் தானா என்பது மாதிரி, ரைட்டர் அவரைப் பார்த்து ஜாக்கிரதையாகச் சிரித்தார். - ஆண்டியப்பனை இன்றைக்கு செமத்தையாக கவனிப்பதாக இருந்த அந்த போலீஸ் இளைஞர், தானே லாக்கப் அறைக்கருகே போய், தானே இரும்புக் கதவைத் திறந்து, "ஆண்டி... நீ போகலாம்" என்றார். ஆண்டிக்கு அவரது மனவுளைச்சல் தெரியவில்லை... தெரியக்கூடிய நிலையிலும் இல்லை. தங்கச்சி எப்படி தவிக்காளோ... குட்டிப்பயல் எப்படிக் கிடக்கானோ... தங்கம்மா எப்படி ஆனாளோ... எல்லாரையும் பாக்கனும். உடனே பாக்கனும்... போலீஸ் நிலையத்தைவிட்டு வெளியே வந்த ஆண்டியப்பன், தலைவிரிகோலமாக, பஸ் நிலையத்தைப் பார்த்து வேகவேகமாகப் புறப்பட்டபோது எதிரே தங்கம்மா வந்தாள். சாலையில் போவோர் வருவோரைப் பற்றிக் கவலைப்படாமல், அவனை அப்படியே வந்து கட்டிப் பிடித்துக் கொண்டு ஏங்கி, ஏங்கி அழுதாள். "ஒங்களுக்கா மச்சான் ஜெயிலு. ஒங்களுக்கா மச்சான் ஜெயிலு? எல்லாம் என்னால... இந்தப் பாவியால..." எனறு புலம்பிக் கொண்டே அவனை இறுகத் தழுவினாள். 2ா.4.