பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 59 இந்த மனசுன்னு மட்டும் ஒண்னு இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவன் வருவதைப் பார்த்து, தங்கம்மாவும் வேகமாக நடந்தாள். திரும்பிப் பாராமலே நடந்தாள். போகலாமா வேண்டாமா என்று சிறிது யோசித்த ஆண்டி. பிறகு ஒரே ஒட்டமாக ஒடி, அவளை வழிமறிப்பது போல் குறுக்கே நின்று கொண்டே கேட்டான்: "தங்கம்... நான் என்ன தப்புப் பண்ணினேன்... ஏன் பேச மாட்டக்கே...?" தங்கம்மா முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டே (δι μέσθόυτποϊτ: "நான் வாரேன்.... நேரமாயிட்டு." "இதுதான் ஒன் பதிலா... நான் பண்ணின தப்பையாவது சொல்லிட்டுப் போ..." "நாம... தப்புப் பண்ணுனால்தான் அவஸ்தப் படனுமுன்னு இல்ல... பிறத்தியார் செய்யுறதப்புக்கும்... அவங்களுக்குப் பதிலா... நாம அவஸ்தப் படனுமுன்னு ஆயிட்டுது... நான் வரட்டுமா...?" "மச்சான் மச்சான்னு சுத்திச் சுத்தி வந்த என் தங்கமா இப்படிப் பேசறது?" "நேரமாவுது... நான் வாரேன்..." "எனக்கும் ரோஷம் இருக்கு பிள்ள... நானும் போறேன்." தங்கம்மா இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவனை ஆசையோடு பார்த்துவிட்டு, பிறகு அதுவே தப்பு என்பதுபோல், முகத்தை மூடிக்கொண்டே, கைவிரல்களை விரித்து, கண்களில் படர விட்டு, விரலெல்லாம் நனைய, வேதனையோடு பேசினாள்: "என்னை... மன்னிச்சிடுங்க... நான் கொலைகாரியாய் போயிட் டேன். அப்பனைக் கொன்னவள்னு, ஊர்ல பேசுறாவ. இனிமே... ஒம்ம கல்யாணம் பண்ணுனால், நான் அய்யாவக் கொன்ன கொலைகாரின்னு ஊர்ல பட்டம் கொடுத்துடுவாங்க... என்னோட அய்யாவ... ஒம்மவிட நான் உசத்தியா நினைச்சது நிசம்... இந்த நிசத்தக் காட்டுறதுக்காவ நான் விலகி நிக்கேன். எப்பவும் விலகி நிக்கப் போறேன். அம்மா, ஒம்மகிட்ட நான் பேசுனால் தூக்குப் போட்டுச் சாவேன்னு சொல்லுதாள். அய்யாவ மாதுரி நான் அம்மாவையும் கொல்லப்படாது. இன்னார் மகள் அவள் அய்யா செத்ததுக்கு அபராதம் கட்டுறது மாதுரி கண்ணுக்குள்ள கண்ணாய் இருந்த அத்தை மவனையே கட்டிக்கலியாமுன்னு ஊர் சொல்லணும். அய்யாவக் கொன்னுப்புட்டு அத்தை மகன்கிட்ட போயிட்டான்னு பேசப்படாது. எங்கய்யா எதை அவமானமா நெனச்சி செத்தாரோ... அதையே... நான் செய்யப்படாது. அவரு நினைச்சது தப்புன்னாலும், அவரோட தப்பை நான் ஏத்துக்கிடணும். மயினி எப்படி..."