பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 65 பாளைகளுக்கு இளக்காரமாகிவிடும் என்பதை உணர்ந்து, அண்ணன் பரமசிவத்திடம் வாதாடி, மாசான மச்சானிடம் பழைய காதலை ஞாபகப்படுத்தி அழுது, முன்னவரின் மகளை, பின்னவரின் மகனுக்கு 'முடிச்சுப் போடும் வேலையைச் செய்துவிட்டாள். பண்ணையார்கள் மத்தியில் தனக்குப் புதிய அந்தஸ்து கிடைத்த திருப்தியில், மாசானம் மகிழ்ந்து போனார். முகப்பு அறையில் ஒரு மேஜையின்மேல், இரண்டு தாம்பாளங்களில், தேங்காய், பழம், எல்லாவற்றிற்கும் மேல் வரதட்சணையாக ரூபாய் நோட்டுக் கற்றைகள் வைக்கப்பட்டிருந்தன. எப்படியோ, சுபயோக சுபதினத்தில் அந்தத் தாம்பாளத்தட்டுக்கள் அசல் மாப்பிள்ளை ஜோடனையோடு வந்திருந்த மாசானத்திடமும் குமாரின் அப்பாவிடமும் கொடுக்கப்பட்ட பிறகு, நாற்பது ஏக்க நிலத்தில், அதுவும் நஞ்சை நிலத்தில், முப்பது ஏக்கரை வாயில்லா மனிதர்கள் பேரில் எழுதி வைத்திருக்கும், பண்ணையார் கதிர்வேல்பிள்ளை பெரிய சத்தத்துடன் பேசினார்: "நாம... பஞ்சபாண்டவர் மாதிரி... ஒற்றுமையாய் இருந்தால்... எந்தப் பய வாலாட்ட முடியும்? ஆண்டிப்பயல் கூட சட்டம் பேசுறான்னால், அது அவனோட வீரம் இல்ல... நம்மோட தெம்மாடித்தனம். செறுக்கி மவன... ஆளு வச்சாவது கொல்லணும். கூலிப்பயலுவள... இந்த சின்னான் பய வேற தூண்டி விடுறான். நேத்து... என் முகத்துக்கு எதுருலேயே... அந்த சேரிப் பய வீரபாகு... செத்த மாட்டை நாங்க தூக்கவும் மாட்டோம், தின்னவும் மாட்டோ"முன்னு சொல்றான். காலத்தைப் பாத்தியளா.. அவனுவ... பார்க்கிற விதமே சரியில்ல... இதுக்குல்லாம் நாமதான் காரணம், பரமசிவத்தை... ஆண்டியோட தனியாவிட்டோம். அவன்... ஜெயிலுக்குப் போவாம. திரும்பும்படியா விட்டோம். இப்போ... லேசா... ஒவ்வொரு பயலும். ஆண்டி மாதிரி ஆகிக்கிட்டு வாரானுவ... அந்தப் பிச்சாண்டிப்பய... ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி இப்போ... மாசானத்தையே கடிக்கிறான்." மாசானம் பதறினார்: "என்னவாம்... என்னவாம்..." "சரியான பயித்தியக்காரன் நீ... அந்தக் கண்ணு தெரியாத கிழவி கிட்ட வாங்கிப் போட்டியே வயலு. அந்த... பிச்சாண்டிக் கிட்டி... என்ன ரேட்டுக்குப் பேசி குத்தகைக்கு விட்ட?" "பாதிக்குப் பாதி..." - "பிச்சாண்டிப்பய... சர்க்கார் இப்போ போட்டிருக்கிற சட்டப்படி... வெள்ளாமையில முக்கால் பங்கை எடுத்துக்கப் போறானாம். என் கிட்டேயே சொல்லுதான்." "செருக்கி மவன. செருப்பைக் கழட்டி அடிக்கப்..." "வினையே... ஒன்னாலதான் வந்தது. பரமசிவத்துக்கு வந்தது. இப்போ ஒனக்கும் வரப்போவுது." oort -5.