பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஊருக்குள் ஒரு புரட்சி "எதுக்குய்யா அவங்களை கட்டி வச்சியரு..." "அவங்ககிட்டயே கேளும்..." "மொதலாளி இப்டிப் பேசப்படாது. அப்புறம் தங்கப் பல்லு கட்ட வேண்டியதிருக்கும்..." "ஏல பறப்பயல..." ஒரு ஜாதி விவசாயக் கூலி, மாசானத்துக்குப் பதிலளித்தான். "பறப்பய கிறப்பயன்னு பேசுனா... பல்ல ஒடச்சி. கையில கொடுப் பேன்... எதுக்குவே அவங்கள கட்டி வச்சியரு? ஏண்டா... கூலிப் பயலு வளா நாளைக்கி... ஒங்களயும்... அவன் இப்டி கட்டி வைக்க மாட்டான் என்கிறது என்ன நிச்சயம்... ஒங்க கண்ணையே நீங்க குத்திக்க லாமாடா..." ~. மாசானம் ஆட்கள் கைகலப்புக்குத் தயாராக வேல் கம்புகளை தரையில் குத்திப் பார்த்தார்கள். ஆனால் மாசானம் விட்டுக் கொடுப்பதுபோல் பேசினார். கோர்ட் வழக்குன்னு... எவன்... அலை வான். இவனுகள... குளோஸ் பண்றது தெரியாம பண்ணனும்... சிமெண்ட்ல. கலக்கது தெரியாம கலக்கது மாதுரி. "நான் மாடா ஒழைத்து... இந்த நிலத்த வாங்கிப் போட்டிருக்கேன். கடன் வாங்கி... நிலம் வாங்கியிருக்கேன். வாங்குன கடனுக்கு வட்டிகூட கொடுக்கமுடியல... இவன்... வெள்ளாமையில... முக்கால்வாசி கேக்கான்... நியாயமா... நீங்க சொல்லுங்க... ஏல... வேல் கம்புவள கீழ போடுங்கல... பயித்தியக்காரப் பய மவனுவளா... சொல்லுங்கப்பா..." "நியாயமோ... அநியாயமோ... நீரு எப்டி... அவங்களை கட்டி வைக்கலாம்?" நிலைமையை எப்படிச் சமாளிக்கலாம் என்று மாசானம் யோசித்துக் கொண்டிருந்தபோது, குமாரும், மாணிக்கமும் வந்து, மாசானம் பக்கத்தில் நின்று கொண்டார்கள். பரமசிவமும், ஜம்புலிங்கமும், கதிர்வேல் பிள்ளையும் கூடி விட்டார்கள். சின்னான், நான்கைந்து சேரி ஆட்களுடன் அங்கே வந்தான். பிச்சாண்டிக்கு, குமாரைப் பார்த்ததும், தன் தம்பியைப் பார்ப்பதுபோல் இருந்தது. படித்த பையன். வார்த்தைக்கு வார்த்தை, 'சித்தப்பா சித்தப்பா என்பவன். ஒரு தடவை ஒரு நல்ல சிலாக் சட்டயா வாங்கிப் போடும் சித்தப்பா என்று சொன்னவன். பிச்சாண்டியால் விம்மலை அடக்க முடியவில்லை. கேவிக்கொண்டே முறையிட்டான். "குமார், நீயே சொல்லுப்பா.. எங்கள... அடி அடின்னு அடிச்சி இந்த மரத்துல கட்டி வச்சிட்டாரு... நீகூட அன்னிக்கி மேடையில பேசும்போது. சர்க்காரோட... நிலச்சீர்திருத்தத்த அமல் பண்ணணுமுன்னு பேசலியா... சர்க்கார் கொடுக்கச் சொன்னத கேட்டது தப்பா? நீயே சொல்லு குமார்... நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்." குமார், பிச்சாண்டியைக் கடுமையாகப் பார்த்தான். பார்த்துக் கொண்டே கேட்டான்: