பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 85 "தங்கம்... என்ககூட நடக்கக்கூடப் பிடிக்கலியா... ஏன் பேசமாட்டக்கே தங்கம்..." "தங்கம்மா... அப்பனோட செத்துட்டாள்... இப்ப இருக்கவா... இன்னொருத்தி..." "செத்தவ... என்னையும் சாகடிச்சிட்டு செத்திருக்கலாம்..." தங்கம்மா பதிலளிக்கவில்லை. முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. துக்க எள், துளிர்விட்ட முகம்... மங்கலான பார்வை... பிணத்தில் உயிர் ஒன்று, வெறும் ஜட இயக்கத்துக்காக மட்டுமே இருப்பது போன்ற அசைவுகள்... கோபப்படப் போன ஆண்டி, அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுப் பேசினான். "தங்கம்... ஒனக்கு கல்யாணமுன்னு கேள்விப்பட்டேன்... நிசமா சொல்லு தங்கம்..?" "அம்மா..." 'வ்சால்லு" "அம்மா... ஏதோ துப்புப் பார்த்துக்கிட்டு இருக்கா..." "ஒனக்கு... இதுல சம்மதந்தானா..." "எங்கய்யா... என் சம்மதத்தோடயா இறந்தாரு... எல்லாம்... நம்ம சம்மதப்படியா நடக்கு... நடக்கதுல்லாம் சம்மதமுன்னு நினைச்சாத்தான் வாழ முடியும்..." "அப்படின்னா ஒம்மா சொல்லுத மாப்பிள்ளைக்கி. கழுத்த நீட்டத் தயாரா இருக்க... அப்படித்தான?" "அய்யாவக் கொன்னவ நான். அவர கொன்ன ஊர்ல இருக்கப்படாது. இந்த ஊர விட்டு எங்கேயாவது ஒடிப்போவணும். எப்டி ஒடிப்போனாலும் சம்மதந்தான்." "அப்படின்னா ஒண்னு செய்... வீட்டுக்குப் போய் ஒரு அருவாள கொண்டு வாரேன்... ஒன் கையால என்ன வெட்டிடு..." "எனக்கு நேரமாவுது. அம்மா தேடுவாள்... அய்யாவோட சமாதில போயி... தங்கரளிப்பூவ வைக்கணும். இன்னைக்கி செவ்வாக்கிழம..." "என் சமாதிக்கும்... ஒரு தடவயாவது வந்து... ஒரு பூவ வச்சிட்டுப் போ... முடியுமுன்னால் ஒன் புருஷனோட வேணுமுன்னாலும் வா..." ஆண்டியப்பன், வெறிபிடித்தவன்போல் நடந்தான். தங்கம்மா புல்லுக்கட்டை அங்கேயே போட்டுவிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அசையாமல், ஸ்தம்பித்து உட்கார்ந்து இருப்பது தெரியாமல், அவளைத் திரும்பிப் பாராமலே நடந்தான். ஆவேசம் அனலாக, மனம் போன ப்ோக்கில் நினைத்து, கால் போன போக்கில் நடந்து, கண் நோக்கிய காட்சிகளைக் காணாமல், நடந்து கொண்டிருந்த ஆண்டியப்பன், திடீரென்று. லேசாக நடையைத் தளர்த்தினான். அவன். அமைச்சர் கரம்பட வாங்கிய, அந்த ஜெர்ஸி இன