பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 87 மார்புச் சேலைக்கு மேலே கிடந்த மஞ்சள் கயிற்றுக்கடியில், அந்த மஞ்சள் துண்டு தொங்கியது. எதுவும் புரியாமல், எங்கேயோ இருப்பதுபோல், யாரோ யாருக்கோ, எதையோ கொடுப்பதுபோல், அவன், கண்ணிருந்தும் பார்க்க முடியாதவன்போல் பார்த்தான். மீனாட்சி, அவனின் கோர மவுடிகத்தை, தன் வீரப் பேச்சால் குலைத்தாள். "வெண்ண திரளும்போது. தாழிய உடைக்கப் படாது அண்ணாச்சி... நாளைக்கி நீ விசாரணைக்கு போய் ஆகணும். இப்போ நான் கொடுக்கிறது நீ... நியாயத்துக்குக் கட்டப் போற தாலி... கட்டுறத கட்டு... அப்புறம் நியாயம்... அறுதலியா நின்னா நிக்கட்டும்... அப்டி நிக்காது... இப்போ... நான் ஒன்கிட்ட கொடுக்கிற இந்தத் தாலி... அநியாயக்கார பாவியளோட தாலிய அறுக்காம விடாது. ஏன் அண் ணாச்சி கலங்குற நம்மகிட்ட ரெண்டு இருக்கு... முதல்ல நியாயத்தை வச்சி அடிப்போம். அது முடியாட்டால்... அருவாள் எங்கே போயிட்டு...! இவனுவள எரிக்காம என். சடலம் எரியாது!" ஆண்டியப்பன், அவளை. பயத்தோடும், பயங்கலந்த வியப்போடும் பார்த்தான்... சடலம், கிடலமுன்னு பேசுறாளே... எதுக்கெடுத்தாலும் அழுகிறவள்... இன்னைக்கி ஏன் இப்டிப் பேசுறாள்? முகம் ஏன் இப்டி... காளியாத்தா மாதுரி கோரமா இருக்கு கண்ண ஏன் இப்டி உருட்டுறாள் "வாங்குறியா... இல்லையா..." மீனாட்சியின் அதட்டலுக்குப் பயந்தவன்போல், அவன் மறுமொழி கூறாமல், அந்தத் தாலியை பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். கால் பவுன் தங்கம். அவள் கழுத்துக்கு வேலியாக இருந்த லிங்கம் பொறித்த அந்தத் தாலி, வேலிக்குள் அடைபட்ட நீதியை, அந்நிதிக்குள் அடைபட்ட மாட்டை மீட்கும் சூலாயுதம் போல் அவனுக்குத் தோன்றியது. என்ன சொல்வதென்று புரியாமல், தன்னையே நோக்கிய தங்கையை, தானும் நோக்கி, அவளின் இதுவரை காணாத அசாத்தியமான பார்வைக் கூர்மையால் பட்டை தீட்டப்பட்டவன்போல், அவன் கண்கள் ஜொலித்தபோது காத்தாயி வந்தாள். "இந்தாரும் பத்து ரூபா... சின்னான உருட்டி மிரட்டி வாங்குனேன். அதிகாரிவளப் பாத்து பயப்படாதயும். முக்கால் வாசிப் பேர ஒரு கோழி முடியைக் காட்டி மிரட்டினாக்கூட பயந்துடுவாங்கன்னு சின்னான் கிறுக்கன் சொல்லுதான். அநியாயக்காரங்களுக்கே பயப்படுறவங்க... நியாயக்காரனுக்கு நிச்சயமா பயப்பட்டுத்தான் ஆகணும். சும்மா... வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசும். ஏன் பணத்தை வாங்காம... பாக்கியரு." ஆண்டி, அந்த பத்து ரூபாயையும் வாங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டான் மீனாட்சியை அர்த்தத்துடன் பார்த்தபோது. அவள் "என்