பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 91 "எங்க ஊரு தலைவருங்க இதோ இருக்காங்க... கேளுங்க..." "இது ஆபீசா... வீடா... எனக்கு அடைக்கலசாமி இறந்துட்டார்னு ரிக்கார்ட் வேணும். அப்புறந்தான் மேற்கொண்டு விசாரிக்க முடியும்... அதோட, இவருதான் மாட்ட பிடிக்கச் சொன்னார்னு நீ நிரூபிக்காட்டால், இவரு ஒன்மேல மானநஷ்ட வழக்குப் போட்டால், நான் பொறுப்புல்ல... நாலையும் யோசித்து... அடுத்த மாசம் மூனாந்தேதி வா..." ஆண்டியப்பனால், மேற்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆறுமாத காலமாக அடக்கி வைத்திருந்த ஆவேசம். இன்னொரு ஆண்டியப்பனாக உருவெடுத்தது. பழையவன் செத்து. புதியவன் பிறந்தான். அங்கே செத்துக் கொண்டிருந்த நிதி. இவனுள் வந்து துடித்தது. "அட நிறுத்துய்யா... நீயும் ஒன் விசாரணையும்... ஒன்னை மாதுரி பொட்டப்பயலுவ ஆபீஸரா ஆனதாலதான்... இப்போ நியாயமும் பொட்டையாயிட்டு... ஊர்ல வந்து விசாரிக்காம, மின்சார விசிறிக்குக் கீழே நீதி வழங்குற ஒங்கள மாதுரி அயோக்கியங்களால... இப்போ யோக்கியனும்... அயோக்கியனாய் ஆகலாமான்னு யோசிக்கான். நல்லா கேளுய்யா... என்னை இந்த சட்டத்துல... நம்பிக்கை இல்லாம பண்ணிட் டிய... சட்டத்துல இருக்கிற ஒட்டையில அயோக்கியன் தப்பிக்கிறான். ஏழை அந்த ஒட்டையில கட்டி இருக்கிற விசாரணை என்கிற தூக்குக் கயிறுல தொங்குறான்... ஒம்மகிட்டப் பேசிப் பிரயோஜனம் இல்ல... ஒம்ம பேச வெக்கிறவங்கள... பேச முடியாத இடத்துக்கு அனுப்பிட்டால்... நீரும் பேசாமல் இருப்பியரு. ஏய்... மாசானம்... பரமசிவம்... ஒங்களத் தாண்டா. குமார்... மாணிக்கம்... நீங்கல்லாம் ஊருக்கு வாங்க... அங்கே ஒங்களுக்கு... நான் இழவு எடுக்காட்டால்... என் பேரு ஆண்டி இல்ல.ா... அசிங்கம் பிடிச்ச பயலுவளா .." "போலீஸ் போலீஸ்" என்று அதிகாரி சன்னமான குரலிலும், மற்றவர்கள் வழியில மடக்குவானோ என்று நடுங்கிக் கொண்டும் இருந்தபோது, ஆண்டியப்பன் ஆவேச வடிவாகி, அதற்குத் தன் உருவமே உயிராகி, அனைத்துமே தூசாகி, அந்த மனிதத் தூசிகளைத் தட்டி விடுபவன் போல், வேட்டியில் படர்ந்த தூசியை தட்டிவிட்டுக் கொண்டே வெளியேறினான். "போலீஸ்ல உடனே சொல்லணும்" என்று குமார் எழுந்தான். எல்லோருமே எழ முடியாமல் எழுந்தார்கள். 1 3 வேஷங்கள் கலையும் போது விபரீதங்கள் நடப்பதும், விபரீதங்கள் நடக்கும்போது வேஷங்கள் கலைவதும் இயற்கை. அந்த இயற்கையின்