பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 93 ஒரு ஏழையின் சுதந்திரம், அவன் தன்மானத்தைப் பற்றிக் கவலைப்படாத போதுதான் தற்காலிகமாகவாவது நிற்கிறது என்ற அரிய உண்மையை உணர்ந்தவன் போல், வீதியில் காலிழந்து நிற்கும் முடவர்களையும், கண்ணிழந்து நிற்கும் கிழவிகளையும், சொறிநாய்கள் குடியிருப்புப் பகுதியில் மழையால் அடுப்பு நனைய, விழி பிதுங்கிய ஏழைகளையும் பார்த்த கண்களோடு, விசேஷ பஸ் ஒன்றில், பெண்களைப் பார்த்து சீட்டி அடித்துக் கொண்டு போகும் ஒரு இளைஞர் கோஷ்டியையும் பார்க்கிறான். கல்யாணமும், கருமாதியும் ஒரே சமயத்தில் நடப்பது போல், கற்காலமும், பிற்காலமும் ஒரே சமயத்தில் இயங்குவதுபோல் தோன்றிய கூட - கோபுர - குடிசை வீதியில், பளபளப்பான கார்களும், பாதுகை இல்லாத மனிதர்களும் மலிந்த வீதியில், தனியார் பஸ் ஒன்றில் அடிபட்டு, துணியால் மூடப்பட்டுக் கிடக்கும், ஒரு ஏழையின் சடலத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே அந்த ஏழையின் குடும்பம், நஷ்டஈடு கேட்டால், தன்னைப்போல் ஏமாற்றத்திற்கு ஆளாகும் என்ற எண்ணம் எரிச்சலாக, தன்னை அறிந்தவன் போல் சிந்தித்து, அவன் தன்னையறியாமலே பஸ் நிலையத்திற்கு வந்து விட்டான். மழையும் நின்றது; அவனும் நின்றான். திடீரென்று, தன் கைகள் பிடிக்கப்படுவதை உணர்ந்து, அவன் தலையை நிமிர்த்தியபோது, கோபால் பெட்டி படுக்கையுடன், அவனை ஒட்டிக்கொண்டு நின்றான். அவனிடம் இவனோ, இவனிடம் அவனோ பேசவில்லை. ஆண்டியின் கண்களையும், நிமிர்ந்து நின்ற மோவாயையும் பார்த்துப் புரிந்து கொண்ட கோபால், அவன் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். இருவரும் மவுனமாக ஒரு ஹோட்டலுக்குள் போனார்கள். இட்லியில் கை வைத்துவிட்டு, சூடு தாங்க முடியாமல் கையை உதறிய கோபால், "நெருப்பும். நிதியும் ஒன்று. தொட்டால் ரெண்டுமே சுடுது" என்றான். ஆண்டி எதுவும் மறுமொழி கூறாமல் இருப்பதைப் பார்த்து விட்டு இதனாலதான் நீதியை ஆறப் போடுறாங்க போலுக்கு" என்றான். ‘என்ன நடந்தது' என்று நேரிடையாகக் கேட்காமல், அவன் ஜாடைமாடையாகப் பேசியதைப் புரிந்தோ அல்லது புரியாமலோ, ஆண்டியப்பன் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காமலே அவனுக்கு அவனே பேசுவது போல் பேசினான்: "எனக்கு ஒரு சந்தேகம்... என் தங்கச்சிக்கு... எல்லா தாயுங்களுக்கும் வாரதுமாதுரி... பிரசவத்திற்குப் பிறவு பால் சுரந்தது. அப்டி... பால்... சுரந்து... மார்புப் புண்ணோட உபாதை தாங்காமல் கஷ்டப்பட்டாள். அத்தை மகளுக்கு அவஸ்தைப்படும்போது ஆறுதல் சொல்றதுக்காவ மாமா மவள் வந்தாள். அதனால சாகக் கூடாத மனுஷன் செத்துட்டார். எனக்கு ஒரு சந்தேகம். ஏழைகளுக்கு, நல்லதாய் வாரதுகூட கெட்டதாய் முடியுமோ...? இல்லன்னா... விசாரணைக்குன்னு சந்தோஷமா வந்துட்டு,