பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

படுவாய், நீ உன் வயிறே கதியாக இருக்கிறாய், இதனால் நீ குருகுலத்துக் கட்டளைகளை மறந்து மீறுகிறாய். பசியுடன் இருக்கும்போது நீ நடந்துகொள்வது உன் கையில் இல்லை, நான் பல முறை உன்னிடம் சொல்லியிருப்பது போல், எவன் தன் மன வலிமையால் உடல் ஆசைகளை அடக்கமுடியாமல் தவிக்கிறானோ, அவன் எந்த இழி நிலைக்கும் இறங்கி விடுவான்; அவன் வேடிக்கை பார்க்கப் போவதற்காக ஒரு பொய் சொல் வான். பசி என்பதற்காகத் திருடி விடுவான். நல்ல உடை வேண்டும் என்பதற்காக ஏமாற்றி விடுவான். இதெல்லாம் பற்றித் தெரிந்துகொள்ளத்தான் உன் தந்தை உன்னை என்னி டம் அனுப்பியிருக்கிறார், இல்லையா உபமன்யு?” குருதேவர் வருத்தந்தோய்ந்த குரலில் இவ்வாறு மெல்லக் கூறவே உபமன்யு வெட்கமடைந்தான். அவனைத் திட்டி னாலோ அடித்திருந்தாலோ கூட அவ்வளவு ரோசம் வந்திருக்காது. மறுபடி இவ்வாறு தன் மீது குற்றம் காண முடியாதபடி நடந்து கொள்ளவேண்டும் என்று அவன் தீர்மானித்தான். குருவை நேருக்கு நேர் பார்க்கவே கூசினான். தலை குனிந்த, வாறே, “தாங்கள் ஆணையிடும் வரை நான் ஒரு கவளம் கூடச் சாப்பிடமாட்டேன்' என்றான். - - உபமன்யு அன்றும் மறு நாளும் ஒன்றுமே சாப்பிடவில்லை. மூன்றாவது நாள், பசுக்களை மேய்ந்து கொண்டிருந்தபோது,. தாங்கமுடியாத பசியாக இருந்ததால், ஒரு செடியின் தழை களைப் பறித்துத் தின்றான். அதுவோ ஒரு மருந்துப் பச்சிலை. செடியில் இருந்த ஒரு நெடி அவனைத் தாக்கி, அவன் கண் - பார்வையை பாதித்தது. உபமன்யுவின் கண் கெட்டுவிட்டது.. சரியாகப் பார்க்கமுடியவில்லை. அவன் பயந்துபோனான், தட்டுத் தடுமாறி, மாலை இருட்டுவதற்குள் குருகுலம் திரும்ப வேண்டும் என்று முயன்றான். ஆனால் வழி தெரியவில்லை. பாதை தவறிவிட்டது. ஆழமான ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தான். இருட்டில், தனிமையில், பயத்துடன் அழுது. கொண்டிருந்தான். காடெங்கும் கரிய இருள் சூழ்ந்தது.