பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே விட அழகாகவும் பளபளப்பாகவும் இருக்குமே என் மேனி, அந்த அழகு எங்கே? நல்ல சத்தான, ஆரோக்கிய மான உணவு கிடைக்காமல் வாடுகிறேன். அதனுல் அசதி யாகவும் சோர்வாயும் இருக்கிறேன்’’.

"ஓ! அதுதான் காண்டவ வனத்தைத் தின்னவேண்டும் என்கிருயா???

"ஆமாம். அது ஒரு காரணம். காண்டவ வனத்தில் எனக்கு வேண்டியதெல்லாம் இருக்கிறது: வாயின் உள்ளே பட்டதும் நொருங்கும் காய்ந்த சுள்ளிகள் அங்கே உண்டு. சாறு நிறைந்த பசுமையான செடியும் கொடியும் புதரும் உண்டு. எனது பல நாக்குகளில் ஒன்ருல் பழங்களின் சாற்றை உறிஞ்சுவேன்; இன்னென் ருல் அமுதம் போல இனிக்கும் விலங்கு மாமிசத்தை ருசிப்பேன்’ என்று வருணிக்கத் தொடங்கிய அக்னியைத் தடுத்து, - -

'இது ஒரு காரணம் என்கிருய், வேறு என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ச்சுனன். -

வேறு காரணம் இருக்கிறது,” என்ருன் அக்னி உணவுப் பட்டியலிலிருந்து தன் நினே வைத் திருப்பி. காண்டவ வனம் இந்திரனுடைய பாதுகாப்பில் இருக்கிறது. எனக்கு ஒன்று புரியவில்லை. தேவலோகத்தை ஆளும் சகல வல்லமை பெற்ற இந்திரன் ஏனே பாதுகாப்பு பற்றி பயப்படுகிருன். எந்த நிமிஷமும் தன்னை யாராவது விரோதிகள் தாக்குவார் களோ, யாராவது புரட்சி செய்து பதவியைப் பிடுங்கிக்கொள் வார்களோ என்று பயப்படுகிருன். விண்ணிலும் மண்ணிலும் யாரையுமே விரோதிகளாக நினேத்துப் பார்க்கிருன்.”

'ஒகோ. காண்டவ வனத்தில் இந்திரனுக்கு நண்பர் களேர் ஒற்றர்களோ இருக்கிருர்கள் போலிருக்கிறது” என்ருர் கண்ணன்.

"ஆமாம். அவர்கள் தலைவர் யார் தெரியுமா? தட்சகன்.”

என்ன சொன்னுய்?’ என்று அதிசயித்தான் அர்ச் சுனன், நாகர்களின் அரசன் கேவலம் ஒரு ஒற்றளுகத் தாழ்ந்து போவதா? -

'அவன் தவறு அல்ல அது. எனக்கு அவன்மீது விரோ தம் இல்லை. எங்கள் வழியில் நாங்கள் போகிருேம். ஆனல் அந்தக் காட்டில் உள்ள பாம்புகள் அவனைப் போல் நியாய

55