பக்கம்:எக்கோவின் காதல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

155

"அப்பப்பா! சும்மா இதே பேச்சுதான்; இந்தப் பேச்சுக்கு ஒரு முடிவே கிடையாதா," அவனுடைய சட்டைப் பையில் கையை விட்டாள், 'மணிபர்சு' ஒன்று இருந்தது. அதை எடுத்துக் கொண்டு 'இது என்னிடம் இருக்கட்டுமே' என்றாள்.

"வைத்துக் கொள்ளேன் உனக்கில்லாமலா” என்றான். 'பர்சைத் திறந்து பார்த்தாள். ஒரு காசுகூட இல்லை. வெறும் 'பர்சா'க இருந்தது. “பூ! இவ்வளவு தானா! பணம் இருக்குமென்று பார்த்தேன். ஒன்றுமே இல்லையே! உங்கள் காதலும் இந்தப் 'பர்சு' மாதிரி தானோ?” என்று கிண்டல் செய்தாள்.

“என் காதல் வெறும் 'பர்சு' அன்று. மாணிக்கங்களும், இரத்தினங்களும் நிறைந்த 'பர்சு' பழகப் பழகப் பழையதாகிக் கிழிந்துவிடும். என் காதல் என்றும் புது மெருகோடிருக்கும்; பழுது படாது” என்று சொன்னான். சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது வண்டிவரும் ஒலி கேட்டது. கடைசியாக அரங்கசாமி விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுமுறையில் தனது ஊருக்கு வந்து சேர்ந்தான் அரங்கசாமி. வந்த அன்றைக்கே துடிதுடித்துக்கொண்டு ஓடினான் பொன்னம்மாளைப் பார்க்க. அங்கே கறுப்பணன் இருந்தமையால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர்கள் பேசாமலும் இருக்கவில்லை . காதலர்கள் பேசுவதற்குக் கண்ணைவிடச் சிறந்த கருவி வேறு ஏது?

ஞாயிற்றுக்கிழமை வந்தது. பொன்னம்மாள் ஆவலோடு அரங்கசாமியின் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.